பக்கம்:குறட்செல்வம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

விருப்போரே இரவலர் ஆவர். அவர் தமக்குங்கூட என்றும் இரந்து வாழ்தல் ஏற்ற நெறியன்று.

இரத்தல், வாழ்க்கைக்காக அன்று. வாழ்க்கையை வகைபட நடத்துவதற்குரிய முதலை இரத்தலே இரத்த லாகும். பின் அம் முதலைக் கொண்டு இயன்ற தொழில் செய்து முதலை உண்ணாது, வருவாயை உண்டு மகிழ்ந்து வாழ்தலே ஏற்ற முறை. இந்த அடிப்படையில் இரப்பவரா விருப்பவர்க்கு உற்றுழி உதவுவதும் மனையறத்தார்க்கு உரிய மாண்புள்ள கடமை.

இங்ங்னம் பலருக்கும் துணை நின்று வாழச் செய்து வாழ்தலே, இயல்புடைய இல்லறம் என்றார் வள்ளுவர். இன்றோ, பலருக்கு பால்வேறுபட்ட இருவர்கூடி, ஒரு விட்டில் உண்டு உடுத்தி வாழ்ந்து, மக்களைப் பெருக்கி வாழ்தலே மனையறம் என்றாகிவிட்டது. அதனாலேதான்் துன்பம் சூழ்ந்து வருத்துகிறது. வள்ளுவம் காணும் மனையறம் வையகத்தில் மலர்ந்தால் துன்பம் நீங்கும்; இன்பம் பொங்கும்.

வளர்க வையகம். வாழ்க உலகெலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/26&oldid=1276234" இலிருந்து மீள்விக்கப்பட்டது