பக்கம்:குறட்செல்வம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48🞼 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இலக்கண மரபுப்படி எஞ்சுதல் எச்சம் ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு அவனுடையதாக இந்த உலகில் எஞ்சுவது அவனுடைய புகழ் அல்லது பழியேயாகும். தடுவு நிலைமை கொண்டோழுகியோருக்குப் புகழ் நிற்கும். அல்லாதோர்க்குப் பழி நிற்கும்.

வரலாற்றுப் போக்கிலும் இவ்விரண்டு காட்சிகளையும் பார்க்கிறோம். பாரியின் புகழ் எஞ்சி இன்றும் உலவுகிறது. அழுக்காற்றின் காரணமாக நடுவிகந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தரின் இகழ்ச்சியும்பழியும் இன்றும் எஞ்சி நிற்கிறது. ஆதலால், --

தக்கார் தகவிலர் என்பர் அவரவர்

எச்சத்தால் காணப் படும். என்ற குறட்பாவுக்கு-எச்சத்தாற் காணப்படும் என்பதற்கு அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கின்ற புகழ் அல்லது பழி இவையே அவர்களின் நடுவு நிலைமைச் சிறப்பைக் காங்டும் என்று பொருள் காண்பதே சிறப்பாகத் தெரி கிறது.

米 栄 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/50&oldid=1276332" இலிருந்து மீள்விக்கப்பட்டது