பக்கம்:குறட்செல்வம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கின்றார். அழுக்காறு வேறு - பாவி வேறல்ல, என்ற கருத்தை விளக்குவதற்காக ' என ஒரு பாவி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சில தீமைகள் யாரை நோக்கிச் செலுத்தப்படுகிறதோ அவர்களுக்கே அதிகம் தீமை தரும்.

அழுக்காறு என்பதோ, செலுத்துபவர்களுக்கே அதிகத் தீமை தரும். அழுக்காற்றின் நிலைக்களன்கள் பெரும்பாலும் செல்வமுடைமை, அறிவுடைமை, புகழுடைமை ஆகியனவாம். இவற்றை, மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாம லும் அவற்றை அவர்களைப்போல நன்கு முயன்று. பெற, தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவதே அழுக்காறு. -

அழுக்காற்றின் காரணமாகப் பிறருடைய செல்வம், அறிவுடைமை, புகழுடைமை, ஆகியவற்றிற்கு, குற்றம். குறைகளைக் கற்பித்து, அழுக்காற்று நெஞ்சுடையோர் களங்கப்படுத்துவர். இதன் விளைவு தன் முயற்சியை அழித்துக் கொள்ளுதல், பிறர் முயற்சிக்கும்.ஊறு விளை வித்து அழித்தல், பொதுவில் - முடிவாக, முன்னேற் றமும் ஆக்கமும் தடைப்படுகின்றன. இதனை விளக்க வந்த திருவள்ளுவர் திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும்’ என்றார். -

அழுக்காறுடையான் ஒருவன் செல்வத்தைப் பெறு வதற்குரிய முயற்சிகளில் ஈடுபட மாட்டான். அவனுடைய முழுநேர வேலை குற்றங் காணல், துாற்றல், தீங்கு விளைவித்தல் ஆகியனவே. இத் தீயவரிடம் செல்வம் எப்படிச் சேரும்? ஆதலால் செல்வத்தை அழித்து என்றார். செல்வம் இன்மையின் காரணத்தாலும், அழுக்காற் றின் காரணத்தாலும் பல்வேறு தீச்செயல்களைச் செய்வ தால் நரகத்திற்குச் செல்ல ஏதுவாகிறது. இதனைத் தீயுழி உய்த்து விடும் என்றார். இம்மைக்கு வேண்டிய செல்வம், மறுமைக்கு வேண்டிய வீடு இரண்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/68&oldid=1276358" இலிருந்து மீள்விக்கப்பட்டது