பக்கம்:குறட்செல்வம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸65

பல்வேறு திச் செயல்களினின்றும் விடுதலை பெறலாம்.

அழுக்காறு கொள்ளுதல் நரகத்தை இந்த நிலவுலகத்தில் உருவாக்குவதையே ஒக்கும். • . -

அழுக்காறு, கொண்டவரை மட்டும் அழிப்பதில்லை. யாரை நோக்கிக் கொள்ளப்படுகிறதோ அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. முடிவில் சமுதாயம் முழுவதுமே பற்றி எறிந்துவிடும். தன்னைக் கொண்டவரையும் அழித்து, சமுதாயத்தையும் அழிக்கின்ற பேராற்றல் அழுக்காற்றிற்குண்டு. அதனால், பெறுதற்கரிய உயர்ந்த மாமேதைகளுக்கும் மகாத்மாக்களுக்கும் கூட துன்பம் விளைவிக்கப்படுகின்றது. ஏன்?. கடைசியில் அவர்களை இழந்தே விடுகிறோம். -

உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள போர்கள் யாவற்றுக் கும் அடிப்படை அழுக்காறேயாகும். இயேசு, நபிகள், ! சாக்ரடீஸ், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரை எல்லாம் காலத்திற்கு முந்தியே நாம் இழந்ததற்குக் காரணம் அழுக்காறே யாகும். அதனாலன்றேர், எந்த நற்குணம் இருந்தாலும், இல்லையாயினும் அழுக்காறாமை ஒன்றைப் பெற்றிருப்பது பெரும்பேறு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். .

திருவள்ளுவர் அழுக்காறாமை என ஓர் அதிகாரமே வகுத்து, பத்துக் குறட்பாக்களில் அழுக்காற்றின் தீமையை விளக்குகின்றனர். உலகியல் வழக்காற்றுச் சொல்லால் அழுக்காற்றைப் 'பாவி' என்று ஆத்திரத்தோடு குறிப்பிடு கின்றார், திருவள்ளுவர். ' . . . . .

அழுக்காறு எளஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும். என்பது திருக்குறள். பாவங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பதால், அழுக்காற்றைப் பாவி என்று குறிப்பீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/67&oldid=1276357" இலிருந்து மீள்விக்கப்பட்டது