பக்கம்:குறட்செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
 

முன்னுரை

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள், மறை யெனப் போற்றத்தக்கது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத் திற்கும் உரிய ஒப்பற்ற சமயத் தெளிவினைத் தரும் தெள்ளு தமிழ் மறை; உலகப் பொதுமறை. -

திருக்குறள், கடவுள் நம்பிக்கையை ஒத்துக்கொள் கிறது. அந்தக் கடவுளை நிறை குணங்களின் உருவ மாகவே படைத்துக் காட்டுகிறது; ஆயினும், உயிர்க்குப் பற்றுக் கோடாகத் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் திருவடியைக் காட்டுகிறது. இறைவன்றன் திருவடியைப் பேசுதல் - பற்றுதல் அருள் முதிர்ந்த நிலையாகும்.

திருக்குறளுக்கு உயிர் உண்டு என்ற கொள்கை உடன்பாடு. இந்த உயிர் ஒன்றல்ல, பலப்பல என்பதைப் பன்மை விகுதியிட்டுக் குறிப்பிட்டதனாலேயே அறிய முடிகிறது. அதோடு உயிர் இயல்பிலேயே அறியாமை உடையது என்பதும், உயிர் முயன்று அறிவினைப் பெற்.இ உயர முடியும் என்பதும், திருக்குறள் கொள்கை.

வானோர்க்கும் உயர்ந்த உலகம் அடையும் அசி காட்டும் அருள் நூல். திருக்குறள் பயிற்சி, தெளிந்தி அறிவைத்திரும். பிறப்பின் அருமை காட்டி, பிறப்பின் பயன் கூட்டும் பேரற நூல். திருக்குறள் ஒழுக்கம் உயரே நலஞ்சான்ற ஒழுக்கமாகும். வாழ்க்கையில் எந்து ஒழுகுதல், இன்ப் அன்பினைத் தரும்; இறையருளில் சேர்க்கும். அனைவரும் திருக்குறள் பயில்க! குறள் நெறியை வாழ்க்கையில் பயில்க! வாழ்த்து

நமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் கலைவாணி புத்தகால்யத்திாருக்கு நன்றி! கலைவாணி புத்தகாலய உரிமையாளர்_திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நல்ல பதிப்பாசிரியர், கவிஞர், எழுத்தாள்" ஆக்கம் கருதாது பதிப்புத்தொழிலில் மக்கள் நலம் கருதியே ஈடுபட்டிருப்ப்வர்"கலைவ்ாணி சீனி. திருநாவுக் கரசு அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இன்ப அன்பு.

- குன்றக்குடி அடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/7&oldid=1517346" இலிருந்து மீள்விக்கப்பட்டது