பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

орыязанямонтова ... ' 15 வந்தவர்களுடன் மனம் ஒன்றிட வேண்டும். அதன் பின்பே அவர்க்கு மகிழ்ச்சிதரும்படியான காரியங்களைச் செய்ய முடியும். - - - - தெளிவான உடலில்தான் தெளிவான மனம் குடியிருக்கும். தெளிவான மனம்தான் தேர்ச்சியான தேகத்தை வளர்க்கும். இந்தக் குறளில் தெளிவான மனத்தின் தேர்ந்த குணத்தை விளக்குவதற்காக, தேர்ந்த செயல் என்று விருந்தோம்பலை வள்ளுவர் எடுத்துக் கொண்டார். - இப்பொழுது இந்தக் குறளுக்குரிய முழுப் பொருளையும் அகம் பொருந்தியதால் முகம் பொருந்தி, இனிய மொழிகளுடன் வந்தவரை வரவேற்று, விருந்தோம்பல் செய்பவரின் வீட்டில் வளமும், சிறப்பும் அழகும் நீங்காமல் நிறைந்திருக்கும். - ... " - - - செல்வம் நிறைந்திருக்கும் என்று பொருள் சொன்னதும், செல்வம் என்றால் பணம் என்றே படிப்பவர்கள் முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். விருந்தினர்களுக்குச் சரியாக உபச்சாரம் செய்தால், பணம் பெருகும் என்ற பொய் நம்பிக்கை இதனால்தான் புயலாகப் புறப்பட்டுவிடுகிறது. - : செல்வம் என்றால் இன்பம் அழகு, செழிப்பு பெருக்கம் எனப் பொருள். - - - ஆக, நோயற்ற செல்வத்தை, நேர்த்தியான அழகை, வற்றாத வளத்தை, வளர்ந்தோங்கும் செழிப்பை, குடும்பத்தின் அன்புமயமான இன்பப் பெருக்கை. விருந்தோம்பல் அளிக்கிறது. - . . - - ஆக, நோயற்ற செல்வத்தால் நிறைவாழ்வு வ்ாழ்வார்கள். முகப் பொலிவோடு வாழ்ந்து காட்டுவார்கள். பண்பான குடும்பப் பெருக்கத்தால், சமுதாயத்திற்கும் தாய் நாட்டிற்கும் அவர்கள் சான்றாக விளங்குவார்கள். - . .