பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II& டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஐயுணர்வு என்பதற்கு ஐந்தாகிய உணர்வு மனம் என்ற பரிமேலழகரும் ஐயுணர்வு என்பதற்கு ஐந்து புலன்களின் உணர்வு என்று நெடுஞ்செழியனும், ஐவகை அறிவு என்று இளங்குமரனாரும் வித்தியாசமாகப் பொருள் உரைத்திருக்கின்றனர். " . - ஆக, ஐயுணர்வு என்பதற்கு ஐவகை உணர்வு என்று கூறலாம். ஐ என்றால் உயர்ந்த, அதனால் உயர்ந்த அறிவு என்றும் கூறலாம். - ஐயுணர்வு என்றால் ஐயப்படுகிற உணர்வு என்றும் கூறலாம். ஐயப்பட்டுத் தெளிதல் அறிவுடையோர்க்கு அழகாகும். . . . உயர்வு: உணர் என்றால் அறி. உணர்வு என்றால் அறிதல் தெளிதல், உணருதல், உணர்வோரே அறிவுடையவர் ஆவர். எய்திய என்தற்கு உண்டாக்குதல், பெறுதல், பொருந்துதல், பெற்றுக் கொள்ளுதல், சம்பவித்தல் என்பது பொருளாகும். - - - - கண் என்றால் விழி என்றும், பார்வை என்றும், உடம்பு, சரீரம் என்றும், கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு. பயம் என்றால் அச்சம் என்றும், பய்ன் என்றும் கூறலாம். மெய்யுணர்வு: உண்மை, உடல், திடம், திண்மை என்று பொருள் உண்டு. - இப்பொழுது நாம் கூற இருக்கின்ற புதிய பொருள் இப்படி உண்டாகி வருகின்றது. ஐயுணர்வான, உயர்ந்த அறிவானது, நிரம்பப் பெற்றிருந்தாலும், உடல் பற்றிய தெளிவான அறிவில்லாதவர்க்கு, அதனால்எந்தவித பயனும் இல்லாமல் போகிறது. இனி, இப்பொருள் பற்றிய விளக்கத்தையும் விரிவாகக் காணலாம். . . . . - * *