பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா / உலகத்தை உற்று நோக்குகிறவர்கள், உணர்வு மிகுந்தவர்களாகவே திகழ்கின்றார்கள். இதைத்தான் வள்ளுவர் மிக அழகாக ஐயுணர்வு என்று பாடுகிறார். இப்படிப்பட்ட ஐயுணர்வை எய்திய உடம்பினால், என்ன பயன் என்று கேட்கிறார் வள்ளுவர். - கண் என்றால் உடம்பு என்று அர்த்தம் உண்டு. இயற்கையாகவே ஏற்பட்டிருக்கும் ஐயுணர்வைக் கொண்டிருக்கும் உடம்பினால், எப்பொழுது பலன் அதிகமாக ஏற்படும் என்றால், அந்த உடம்பைப் பற்றிய மெய்யுணர்வு இருக்க வேண்டும். - மெய் உணர்வு என்பது உடம்பைப் பற்றிய உணர்வு. உடம்பைப் பற்றிய உயர்வு என்பது என்ன? உடம்பால் அழியில் உயிரால் அழிவர். திடம்படமெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டா. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற திருமூலர் இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவாக விளக்குகிறார். * * - - இதைத்தான் வள்ளுவரும், தனக்கே உரிய தந்திர முறையில் சிறப்புறத் தெளிவாக்குகிறார். . மெய்யுணர்வு மனத்தாலும் முழுமை பெற்றிருக்கும் ஒருவருக்குத்தான் மனிதன் என்று பெயர். இவற்றிலே ஒன்று குறைந்தால் அவருக்கு மனிதன் என்ற பெயர் மாறிப் போய் பலப்பல பட்டப் பெயரல்லவா வந்து விடுகிறது. - கண் ஒளி மறைந்தால் குருடன. காதின் ஒலி கேட்கும். திறன் குறைந்தால் செவிடன். நாவின் சுவையும் சொல்லும் குறைந்தால் ஊமை.மூக்கின் மணம் அறியும் திறன்குறைந்தால் சுரணையற்றவன் என்றெல்லாம் பேரும் நிலையும் மாறிப் போகின்றனவே! . . . . . - * *