பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மக்களிடமிருந்த தங்களை வேறுபடுத்திக் காட்டவே காவியுடை அணிவது, கட்டை காலணி அணிவது, நீண்ட முடி வளர்ப்பது, ருத்திராட்சை மாலை அணிந்து கொள்வது, உடல் முழுவதும் பட்டை அடித்தக் கொள்வது போன்றவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். - இதனால் துறவிகளுக்கு மக்களிடமிருந்து மனிதாபிமான மரியாதையும் மதிப்பும் கிடைத்தது. உண்மையாகவே துறவிகள் என்று காவி அணிந்த எல்லோரையுமே பக்தி பரவசத் தோடு மக்கள் போற்ற ஆரம்பித்தார்கள். காலில் விழுந்தார்கள் காணிக்கைகளைப் படைத்தார்கள், கற்பனைக்கும் மேலே அவர்களை கெளரவித்தார்கள். இதையெல்லாம் பார்த்த பாவிகள், பயங்கரவாதிகள், பகல்வேஷக்காரர்கள், பஞ்சமாபாதகர்கள், பாமர ஜனங்களை ஏய்ப்பதற்காகவும் மேய்ப்பதற்காகவும் துறவி வேடம் பூண்டார்கள். அவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்தவர்கள் போல வெளியிலே நடித்தாலும், மறைமுகமாக எல்லா பாவச் செயல்களிலும் தீய காரியங்களிலும் ஈடுபட்டு இன்பம் அனுபவித்து மகிழ்ந்தார்கள். தாங்கள் பண வசதியோடும், பதவி அந்தஸ்தோடும், அதிகாரசெல்வாக்கோடும் வாழ்வதற்கு உதவுகின்ற பலரை சிஷயர் என்ற பெயரிலே அடிமை யாக்கி வாழ்ந்தார்கள். த்ங்களை புகழ்கின்றவர்களை, பயன்படுகின்றவர்களை பணத்தை அள்ளித் தந்து பாதுகாத்துார்கள். எதிர்த்து பேசியவர்களை ஒழித்துக் கட்டினார்கள். - இப்படிப்பட்ட போலித் துறவிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூற வந்த வள்ளுவர், போலித் துறவிகளை ஆந்தைக்கு ஒப்பிட்டு சுட்டிக் காட்டினார். போலித் துறவிகளை கணை கொடிது யாழ் கோடு என்றார். அதற்கு எல்லோரும் யாழானது வளைந்திருந்