பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் . 19 10. தனஞ்செயன்: உயிர் பிரிந்த பிறகு சிறிது நேரம் தங்கி இருந்து பின் வெடித்து வெளியேறுகிற வீங்கற் காற்றுதான் இது. இந்தக் காற்று வெளியேறிய பிறகுதான் உடல் வீங்குகிறது; நாற்றமெடுக்கிறது; கனக்கிறது. இவ்வாறு பல பிரிவுகளாகப் பிரிந்து பணியாற்றுகிற உயிர்க்காற்று ஒதுங்கியிருந்தால் உடல் உறுப்புக்கள் என்ன ஆகும். இவ்வாறு உரம் பெற்ற உயிரானது உடல் முழுவதும் தங்கி இருக்கிறபோது அது போய்விடாமல் காக்கின்ற பூட்டும், குறுக்குத் தாழ்ப்பாளும் (Volves) உடலுக்குள் இல்லை அல்லவா? - அப்படித் தடுக்க இயலாத தேகத்திற்குள் தங்கி இருக்கும் உயிரையும், உயிர்ப்பான உடலையும் வைத்துக் கொண்டு வீணாக நேரத்தையும், நாட்களையும் போக்குவது கடைத்தனம் அல்லவா மடத்தனம் அல்லவா! நீங்கள் மனிதர்கள் தாமே! ஆகவே, நமது உடலின் உண்மை நிலையை நமது வாழ்க்கையின் மெய் நிலையை மக்கள் உணர்ந்து கொண்டு, நேரத்தே வேண்டியதைச் செய்து வளமாக வாழ வேண்டும் என்ற மெய்ப் பொருளைத்தான் மறைபொருளாகப் பாடியிருக்கிறார் வள்ளுவர்ப் பெருந்தகை. - காக்கும் கதவில்லாத, தடுக்கும் தாழ்ப்பாள் இல்லாத கதவுள்ள வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை அல்லவா? அப்போது வீட்டுக்காரர் மிகவும் எச்சரிக்கையாக வாழ வேண்டும் அல்லவா! அதுதானே புத்திசாலித்தனம். புகுந்து வாழ்ந்து போகிற உயிரை பிடித்து நிறுத்த பூட்டில்லாத தேகத்தின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு புத்திசாலித்தனமாக வாழுங்கள் என்றுதான் வள்ளுவர் போதிக்கிறார். இந்த மெய்ந்நிலைதான் வாழ்வின் மேன்மை நிலையாகும். உயிர் இருக்கும் போதே இந்த உணர்வுடன் வாழுங்கள் என்னும் வழியில் நாமும் வாழலாமே!