பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 43 என்று கூறுவர். விதித்த கடமைகளினின்று வழுவாது ஒழுகுதல்: உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல். - இப்பொழுது நாம், மேற்கானும் பொருள்களை யெல்லாம், தொகுத்து வகுத்துப் பார்க்கிறபோது, வள்ளுவரின் உள்ளம் புரியும். நுண்மான் நுழைபுலமும் புரியும். கல்வி ஆராய்ச்சியும், நூல் புலமையும் மிக்கதாக விளங்குவதையே பனுவல் என்றார். அதனால் எழுந்த தெளிவான, தீர்ந்த நோக்கமும், குறையிலா குறிக்கோளும் நிறைந்த ஒரு கொள்கையைப் பெற்றுத் தருகிறது. . . அந்தத் துணிவுதான் அதாவது அந்தக் குறிக்கோள்தான், நன்மையும் மேன்மையும், சிறப்பும் சீரும் மிக்க ஒழுக்கமாகும். அந்த ஒழுக்கத்தில் நிதமும் வாழ்ந்து, நிலை புரளாமல் நினைவு அலையாமல், நெறி காத்து வாழ்பவரே துறந்தவராவார்.அதுவே அவருக்குப் பெருமையாகும். துறவின் பெருமை என்று கூறாமல், நீத்தார் பெருமை என்று ஏன் தலைப்பிடவேண்டும்? - - நீத்தல் என்றால் பிரிதல், துறத்தல், தள்ளுதல், இழித்தல், வெறுத்தல், நீங்குதல், ஒழித்தல் என்று பொருள். இப்படி உலக ஆசைகளை விட்டு விலகுதல், நீங்குதல் என்றால் அது முடிகின்ற காரியமா? - " - - இன்று தறவிகள் என்று பலர் வேஷமிட்டுக் கொண்டு, காஷாயம் உடுத்திக் கொண்டு, செய்கின்ற காரியங்கள் எல்லாம் சீயென்று, காரித்துப்பும் அளவுக்கு வந்திருக்கிறதே! ஆகவே துறவு என்பது சித்தர்களாவதற்குரிய முதல்படி என்றுதான் அர்த்தம். துறவுகொள்வது என்பது முடிந்து போன விஷயமல்ல. ஒரு சிறு ஆரம்பம்தான். * - நீத்தாராக ஆவதற்கு நான்கு நிலைகள் உண்டு. பிரம்மச்சரியாக இருந்த பிறகு இல்லறம் நடத்திய பிறகு பெறுகிற அடுத்த நிலைதான் துறவு என்னும் ஆரம்பநிலை.