பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் : 55 பெற்று மகிழ்ந்து வாழ்கிற வாழ்க்கை வாழ்பவர்களைத்தான் அறிவுள்ளோர் என்றும், இத்தகைய செயற்பாடற்றவர்களை அறிவில்லாதவர்கள் என்றும் வள்ளுவர் பாடுகின்றார். உலகமாக விளங்கும் பஞ்சபூதங்களொடு நெஞ்சால் கலந்தும், நினைவால் இணைந்தும் உடலால் வாழ்கிற வாழ்க்கைத்தான் கல்வியாகும். ஏனென்றால், பஞ்த பூதங்கள் என்றும் மாறாத தன்மையுடன், ஒரேவித ஒழுக்கத்துடனே இயங்குகின்றன. சூரியன்கிழக்கில்தான் உதிப்பான். மேற்கில் மறைவான் என்று, அவனது இயக்கத்தை அகிலமே அறியும், காற்றின் திசையும் , விசையும் மக்களுக்குத் தெரியும். நீரின் போக்கும் நீக்கும் எல்லோருக்கும் தெரியும். - - அதுதான் இயற்கையின் ஒழுக்கம். அதையும் எதிர்பாராமல், எல்லோருக்கும் தந்து மகிழ்விக்கும் கடமை மிகுந்த இயக்கம் ஆகும். . . . . . கைம்மாறு கருதாது, காலத்தோடு நேரத்தோடு உதவி, காத்து வருகின்ற இயற்கையோடு ஒட்டி உறவாடத் தெரியாதவர்கள், அவர்கள் எவ்வளவு தான் பலப் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அவர்கள் அறிவில்லாத வர்களாகத்தாம் வாழ்வார்கள். - - இயல்+கை தான் இயற்கை ஆகிறது. கைஎன்றால் ஒழுக்கம், பொருந்து, முறைஎன்று பொருள்கள் உண்டு. - ஆக இயற்கையானது ஒழுக்கத்தின் ஒழுக்கமான முறையோடு செயல்பட்டு, மக்களுக்கு எவ்வாறு வாழ வேண்டும் என்று முன்மாதிரியாக இயங்கிக்காட்டுகிறது. இயக்கிக் காட்டுகிறது. அதனோடு ஒட்ட வாழ்வோம். ஒத்து வாழ்வோம், ஒன்றி வாழ்வோம்.உயர்ந்தோராய் வாழ்வோம். சகல நலங்களிலும்