பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 91 மோசமான மனிதர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் முதல்தரமானவர்களாக உயர்ந்திருக்கிறார்களே! வாழ்ந்திருக்கிறார்களே! 'ஆனதற்கு ஒரு ஆகாதது, ஆகாததற்கு ஒரு ஆனது" என்று. ஒரு பழமொழி உண்டு. ஆனதற்கு என்றால் அறிவால், பொருளால், பண்பால், உயர்வானவர். அவருக்கு எதற்கும் ஆகாத ஒழுங்கற்ற பிள்ளைகளும், ஒழுங்கற்றவர்களுக்கு ஒழுக்கமும் உயர்ந்த பண்புகளும் உள்ளதான பிள்ளைகளும் பிறப்பர் என்பது நம்மவர்கள் நம்பிக்கை. - - ஆகவே, ஒருவரை மதிப்பிட அவரது வாழ்வில் எச்சங்களாக இருக்கும், பிறக்கும் குழந்தைகளை வைத்து மதிப்பிடக்கூடாது. - - - ஒருவர் வாழ்ந்து போன பின் அவரது எஞ்சி நிற்கின்ற உண்மை, நன்மை, தீமை இவற்றால் பார்த்துத் தெளிவது என்பது செத்தபிறகு வெற்றிலை பாக்கு தருவது என்னும் பழமொழிக்கு ஒத்ததாக அல்லவா இருக்கிறது. - - வள்ளுவர் வாழ்கிற மக்களுக்காக, வாழ்கிற காலத்தில் பெறுகிற பேறுகளுக்காகத்தான்குறளை எழுதினார். உரை எழுத வந்தவர்களோமுடிந்தவரை செத்தபிறகு பெறுகிற சொர்க்கம், நரகம், மதிப்பு மரியாதை என்றவாறு எழுதி விட்டிருக்கின்றார்கள். - . அவரவர் எச்சத்தால காணப்படும் என்பதற்கு, எச்சம் என்கிற உண்மை, குறை, காரியம், ஈவு இவற்றால் காணப்படும் என்பதாக அர்த்தம் கொள்ளலாம். ஒருவர் செய்கிற காரியம, உரைக்கின்ற - உண்மை-ஏற்படுத்தும் குறை இவற்றால்தான் உடனே ஒருவரை கணிக்க முடியும், கவனிக்க முடியும். . . அவர் இறந்து போன பிறகு, பார்த்து என்ன பயன்? பேசிப் புகழ்ந்து என்ன பயன்? -