பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வடுநாஎன்று கூறியவுடனே வாள் போல பாய்கிற நாக்கு: வண்டுபோல் துளைக்கிற நாக்கு குற்றம் சாட்டி குறை கண்டு குத்திக் காட்டுகிற நாக்கு; தடித்தனமாகப் பேசுவதைத் தர்மமாகக் கொண்டு தழும்பேறிய நாக்கு என்று நாம் கொள்ளலாம். / - வடு என்பது இளங்காய், இளங்காயானது வளருகின்ற தன்மை கொண்டது. முற்றி விழுந்து முடியும் வரை வளர்ச்சியைக் கொண்டது. நா என்றால் தீச்சுவாலை குணம் கொண்டது. இப்படிப்பட்ட வடுவும் நாவும் சேர்ந்து கொண்டு ஒருவரைச் சுடுகிறபோது, சுட்டுகிற போது, திட்டுகிறபோது ஏற்படுவது என்ன தெரியுமா? காயமல்ல; தழும்பும்; அல்ல நஞ்சுதான். ஆல் என்றால் நஞ்சு என்று அர்த்தம். கொடிய குற்றம் மிகுந்த தீச் சொற்கள் உடலிலே பாய்ந்து, ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கி விடுகிறது. தீப்புண்ணின் தன்மைபட்ட இடத்தில் வேதனை மட்டும்தான். - நாவால் ஏற்பட்ட நச்சுத்தன்மை, உடனே உடலெங்கும் மின்னலாகப் பாய்கிறது. புகையாகப் பரவுகிறது. புயலாகச் சீறுகிறது. மனத்தைச் சாடுகிறது. நிதானத்தை விரட்டுகிறது. சுவாசத்தை அடைக்கிறது. பெருமூச்சைக் கிளப்புகிறது. ஒரு நொடியில், நச்சுத்தன்மையின் வேகம், உடல், மனம், ஆத்மா மூன்றையும் ஆதிசேஷன் பாம்பாக ஆட்டுவிக்கிறது. பாற்கடலைக் கடைந்ததுபோல, உடற்கடலைக் கடைந்து குடைந்து, தன்னிலையை இழக்கச் செய்கிறது. தலைகுனிய வைத்து, தள்ளாட்டம் போட வைக்கிறது. - உடலிலே, மனத்திலே, இலட்சக்கணக்காக, பலமைல்கள் தூரம் பரவிக் கிடக்கும் நரம்புகளுக்குள்ளே, நச்சுத் தன்மை கலந்துவிட்டால் என்ன ஆகும்? - • . - ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் பாழாக்க