பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 95 தீக்காயம், திசுக்களை எரித்து, தீய்த்து விடுகிறபோது, - ஏற்படும் கொடுமை, காணப்படுகிற தழும்பும் கொடுமை. இப்படிப்பட்ட தீய கொடுமைகளைச் செய்யும் தீயை வைத்துத்தான், கெட்ட காரியங்களுக்குத் தீப் பழக்கம் என்று சொல்கிறார்கள். - - தீச் சுடுவது ஒரிடத்தில். அதன் வேதனை அங்கு அதிகம் இருக்கும். மற்ற உறுப்புக்கள், தங்கள் வாடிக்கையான கடமைகளை, வழக்கம் போல செய்து கொண்டுதான் இருக்கும். நடைமுறை தளரலாம். ஆனால், எதுவும் நின்று போவதில்லை. இது இயற்கைத் தீயின் கொடுமை. ஆனால் நாத்தி இருக்கிறதே - அதுதான் அகில உலகக் கொடுமையான ஆயுதம் என்று கூற வந்த வள்ளுவர், ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று குறளை முடிக்கிறார். குறளைப் படித்தவுடனேயே கருத்தில் பதிகிற அர்த்தம்-நா வென்னும் தீயினால் சுட்ட புண்ணோ, மாறாத் தழும்பாக என்றென்றும் தீராது, ஒருபோதும் நீங்காது என்பதாக வருகிறது. - இந்த இரண்டாம் அடியை, இயல்பாகச் சற்று பதம் பிரித்தல், வள்ளுவர் கூற வந்த கருத்தின் நயம், எத்தனை திருத்தமாகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது தெரியுமா? ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற வரியை, வடுநாவின் சுட்ட ஆல் ஆறாதே எனப் பிரிக்கிறோம். - இப்போது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருளைப் பார்க்கலாமே! - - வடு என்றால் குற்றம், வண்டு, வாள். இளங்காய், தழும்பு. நா என்றால் நாக்கு, தீச்சுவாலை. - " ஆல் நஞ்சு, அதிசயம். - - ஆறாதே சூடு குளிர்தல், தணிதல், அமைதியாக அடங்குதல். மனச்சமாதானம். - இனி பெறுகிற பதவுரையை விரித்துப் பார்ப்போம்.