பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்நெறி


         22. இடம் அறிதல்.

பொருட்பால். அதிகாரம்-50. இராகம் - கல்யாணி, தாளம் - சாபு,

              கண்ணிகள்.


1.இடங்கண்டு எதனையும் செய்திடுக

   எட்டாத பழத்தையும் கொய்திடுக - மன்னா
 தொடங்கிய வினையதை முடிப்பதிலே
   தோன்றும்இடர் வெல்க துடிப்புடனே.

2.எண்ணிய பகைவரின் இதயம்கண்டு

   ஏற்றஇடம் காணின் வெற்றியுண்டு - மன்னா
 திண்ணிய ராதலே தன்னறிவாலே
   தீரம் செல்லும் இடம் நன்கறிவாயே.

3.முதலையும் யானையை புனலில் வெலலும்

   முன்னது தோற்குமே தரையில் என்றால் - மன்னா
 கதறினும் தேரோட்டம் கடலினில் செல்லாது
   கப்பலோ தரையினில் நடவாது ஈதுண்மை.

4.அஞ்சாமை என்றுமே துணையாகும்

   அரும்பகை கடந்திடப் புணையாகும்- மன்னா
 எஞ்சாமை எண்ணியே ஏற்றவை செய்திடின்
   எந்தப்பகைமையும் இருக்காது மெய்மை.

40 40