பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்மணி; உரிகம். அ இரத்தினசபாபதி, கோலார் தங்கவயல்-2 ஆசிரியர் 'குறள் மலர்' (மைசூர் மாநிலம்)

விண்ணிற் புகழ் மேவும் வியன்கொள் வள்ளுவரின் திருக் குறளே இன்று அறியார் வெகுசிலரே. தமிழன்னைக்குத் திருமுடி யாகி, தமிழர் தலைநிமிர்ந்து கிற்கவும், உலக மக்களனைவரும் ஒருகுலத்தவரென உணரவும், அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெறவும் வழிவகுத்துரைத்த முதற் பெருநூல் திருக் குறளேயாம்

எப்பொருளும் மக்கள் நினைவில் நீடு நிற்பதற்குத் துணை யாவது இசை. குறள்நெறி பாரிற் பரவவேண்டும் எனும் பெரு கோக்குடன் குறட்பாக்களையும், குறட் கருத்துக்களையும் இணைத்து இசையமுது அளிக்கின்ருர், கலைமணி ப, கண்ணன் அவர்கள்.

"குறள்நெறி இசையமுது எனும் முதற் படைப்பில் 33 குறட்பாக்கள் இனிய அமுதாக அமைந்துள்ளன, இயல்,இசை, காடகம்ஆகிய முத்தமிழிலும் தேர்ச்சிபெற்ற ஆசிரியரின் இசை யமுது இனிப்பதில் வியப்பின்று செவிக்கு மட்டுமன்று; உள் ளத்திற்கும் உணர்ச்சிகளுக்குந்தான்.

குறள்நெறியே அறநெறி;அருள்நெறி;அந்நெறிகிற்போரே அறவழி கிற்போர்; ஏனையோர் மறவழி செல்வோரே. இசைக்கு இசையார் எதற்கும் இசையார் ஆதலின் அருள் கெறியை இசைவழியே பரப்பும் ஆசிரியரின் சீரிய முயற்சி பாராட்டற் குரியது.

எங்கணும் எழிலுற, இசையுற முழங்கட்டும் குறள்நெறி இசையமுது செவிவழிப் புசிப்போர் சிந்தை குளிரட்டும் சிக் தனயைக் கிளரட்டும் செயல்படச் செய்யட்டும் எமது கல்வாழ்த்துக்கள்.

இங்ங்னம்,

அ. இரத்தினசபாபதி,