பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 97

வாழ்வைக் கண்ட குறள், அவ்வாழ்வின் அடிப்படையை உலகம் முழுவதும் அறிந்து கொண்டால் பெரும் பயன் கிடைக்கும் என்று கருதி, அவ்வாழ்வையே ஒரு குறளில் சாறாகப் பிழிந்து தந்தது.

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறள் அன்புடைப் பெரியவர்கள் பிறருக்கு உயிரையும் வழங்கும் இயல்பை எடுத்துக் காட்டுகிறது. இன்றும் உலகிடை இத்தகைய பெரியவர்கள் இல்லாமல் இல்லை.