பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 O அ. ச. ஞானசம்பந்தன்

தசையில் புறாவின் எடைக்குச் சமமான அளவு தசையை அரிந்து தருவதாக ஏற்றுக்கொண்டான் சிபி. தராசை நட்டுப் புறாவை ஒரு தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் கொஞ்சங்கொஞ்சமாக தன் உடம்பின் தசைப்பகுதியை அரிந்து அரிந்து வைத்தான்! என்ன அதிசயம்! தட்டு நேர் படவே இல்லை! இறுதியாக தானே அத்தட்டில் ஏறி விட்டான். கருணைவள்ளலாகிய சிபி ஏறியவுடன் அத் தட்டும் புறாவைத் தாங்கும் தட்டும் நேர் நின்றன

கேவலம் ஒரு புறாவின் எடை தன்னுடைய எடையின் அளவுக்குச் சமமாக இருக்க முடியுமா என்ற பகுத்தறிவு ஆராய்ச்சியில் சிபி நுழையவில்லை. அங்ங்ணம் நுழைந் திருப்பானேயானால், இன்று அவனை முதலாகக் கொண்ட ஒரு திருக்குறள் தோன்றப் போவதில்லை. அன்பு உடையவர்கள் பல சமயங்களில் பிறர் அறிந்து கொள்ளுகின்ற சாதாரண விஷயங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. மகன் எவ்வளவு வலிமை உடையவனாயினும், பெரிய பயில்வானாயிருப்பினும், தாய் அவனுடைய வன்மையையும், சத்தியையும் அறிந்து கொள்வதே இல்லை. காரணம், அவள் அணிந்திருக்கின்ற அன்புக் கண்ணாடியில் மகனுடைய உண்மைச் சத்தி விளங்குவதே இல்லை. அதே போலப் புறாவின் துடிப்பையும், பருந்தின் பசியையும் காண்கின்ற சிபியின் அன்புக் கண்களில் புறாவின் எடை பற்றிய கவலை தோன்றவேயில்லை. அதனாலேதான் தராசில் தானே ஏறிவிட்டான். ‘தன் அகம் புக்க குரு நடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்’ என்று புறநானூறும், “புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெரியோன்’ என்று இராமனும், ‘என் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்று. கண்ணகியும் போற்றும் சிறப்பைப் பெற்றான் சிபி.

குறள் கண்ட வாழ்வைச் சிபி வாழ்ந்தான் என்று கூறுவது பொருத்தமற்றது. சிபி வாழ்ந்த ஒப்பற்ற,