பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 99

கட்டுவதற்கு முன்னர், செயலைச் செய்தவர், செய்யப் பட்ட இடம், காலம், சூழ்நிலை, செய்யப்பட்ட மனநிலை ஆகிய அனைத்தையும் கொண்டு பொருள் செய்தாலன்றி, உண்மையை உணர முடியாது.

உதாரணமாகச் சினம் கொள்ளக்கூடாது என்பது யாண்டும் யாரும் எக்காலத்தும் ஒப்புக்கொண்டுள்ள ஒர் அறமாகும். இங்ங்னம் சில அறங்கள் அல்லது நீதிகள் எக்காலத்தும் யாவர்க்கும் பொதுவாகவுள்ளவை என்று சொல்லப்படும். பிறருக்குத் தீங்கு இழைத்தல் கூடாது; சினங்கொள்ளக்கூடாது; பொய் பேசக்கூடாது, என்பன போன்ற அறங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், என்றும் மாறாதவை என்று சொல்லப்படக்கூடிய இவை கூடக் கால, தேச, வர்த்தமானத்தால் மாறுபடும் இயல்புடையனவாகவே இருக்கக் காணலாம்.

“மறந்தும் பிறன் கேடு சூழற்க!’ என்ற குறளை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, சத்தியாக் கிரகத்தைக் கண்டு, சொல்லி, வாழ்ந்து காட்டிய மகாத்துமா காந்தி, எத்தனை துன்பம் நேர்ந்தாலும் சத்யாக்கிரக வாழ்க்கையை மேற்கொண்டவன் பலாத் காரத்தை மேற்கொள்ளக்கூடாது’ என்று பல முறை கூறியுள்ளார். அவருடைய வாழ்வில் அங்ங்ணமே வாழ்ந்து காட்டினார் என்பதும் உலகம் அறிந்த உண்மைதான். என்றாலும், பிரிவினைக் காலத்தில் கயவர்கள் மகளிரை மானபங்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது அடிகளாரைச் சந்தித்துச் சிலர் சூழ்நிலையை விளக்கி, “இத்தகைய நிலையில் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்கள். சிறிதும் தயக்கமில்லாமல் அடிகளார், ‘நீங்கள் பேடிகளாக இருந்தாலொழியச் சும்மா இருக்க வேண்டுவதில்லை, என்று விடை இறுத்தார்.

“மகாத்துமாஜியா இங்ங்ணம் கூறினார்?’ என்றுகூடச் சிலர் நினைக்கலாம். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்