பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 0 அ. ச. ஞானசம்பந்தன்

மேலே நாம் சொன்ன உண்மை நன்கு விளங்கும். எந்த ஒரு நீதியும் கால, தேச, வர்த்தமானங்களுக்குக் கட்டுப் பட்டதே தவிர, தனியே இருப்பதில்லை. இதனை நன்கு, உணர்ந்த காரணத்தால் வாழ வழி வகுத்த குறள், நீதி புகட்டும்பொழுது இதை மறவாமல் செய்து வந்தது. உதாரணமாக ஒன்று காணலாம்.

குறளின் மூன்றாவது அதிகாரமாகிய நீத்தார். பெருமை” என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் “சிறந்த பண்பாடுடைய பெரியோர்கள் கோபம் கொண் டால், அக்கோபத்திலிருந்து யாரும் தங்களை ஒரு கன நேரங்கூடக் காத்துக் கொள்ள முடியாது, என்ற பொருளில்,

‘ குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி,

கணமேயும் காத்தல் அரிது!’

என்று காட்டுகிறது. ஆனால், இதே குறள், முப்பத் தொன்றாம் அதிகாரத்தில் கோபமே கொள்ளக்கூடாது. என்ற பொருளில் வெகுளாமை’ என்ற ஒர் அதிகாரமே. பாடிச் செல்கிறது.

அந்தக் குறளையும், இந்த அதிகாரத்தையும் காணும் பொழுது, பெருநூலாகிற குறள்கூட முன்னுக்குப் பின் முரண்படப் பாடுமோ என்று சிலர் ஐயங்கொள்கின்றனர். இது போன்ற மாறுபட்ட கருத்துக்களைக் கூறும் இயல்பு இந்நூலில் பல இடங்களில் காணப்படும். ஆழ்ந்து சிந்தித்தாலொழிய, இவற்றை முரணான கருத்துக்கள் என்றே குழம்ப நேரிடும். ‘வெகுளாமை’ போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்ட பொருள்கள் அனைத்தும் குறள் கூறிய வழியில் வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற நம் போன்றவர்க்கு உரியனவாகும். ஆனால், நீத்தார் பெருமை போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்ட குறள்கள், நமக்கு வழிகாட்டிகளாக