பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சோர்வு இலாள் பெண்

இந்த உலகில் வாழும் மக்களுள் பெண்களின் இடம் யாது? ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்டிர் ஒரு காலத்தில் மிக உயர்வாகவும், ஒரு காலத்தில் மிகத் தாழ்வாகவும் வைக்கப்பட்டிருந்தனர். இன்று நாகரிகம் மிகுந்ததாகப் பெருமை படுத்திக்கொள்ளும் நாடுகளில் எல்லாங்கூடப் பெண்களின் நிலை மிகச் சமீப காலத்திலே தான் உயர்வு பெற்றது.

இத்தகைய உயர்வையும், உரிமையையும் பெறுவதற்கு அவர்கள் நடத்திய போராட்டம் நூற்றாண்டுக் கணக்கில் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தி, அங்குலம் அங்குலமாக அவர்கள் உரிமையைப் பெற்றுள்ளார்களே தவிர இவ்வுரிமையை ஆண்களே விரும்பி அவர்கட்குத் தந்ததாகத் தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலை ஏனைய நாடுகளில் பரவி இருந்த நிலையில், இத்தமிழ் நாட்டின் நிலை முற்றும் வேறு விதமாய் இருந்தது.

இப்பகுதியில் மகளிரைப் பெரிதும் மதித்து நடக்கும் வழக்கம் மிகு பழங்காலத்திலேயே இருந்ததாக அறிகின்றோம். ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற நூற்றுக்கணக்கான பெண்பாற்புலவர்கள் வாழ்ந்து கவிதை புனைந்த ஒரு நாட்டில் பெண்ணுரிமை பற்றிப் பிரசங்கம் புரிய வேண்டிய இன்றியமையாமை ஏற்