பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 105

பட்டிராது. எனவே, இம்மகளிர் உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவசியமோ, அதற்காகப் பிறரைப் பகைத்துக்கொள்ள வேண்டிய தேவையோ ஒன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அவ்வளவு போராடி உரிமையை நிலை நாட்டியதாலே தான் போலும், அந்நாட்டு மகளிர் நம் நாட்டு மகளிரை விடப் பல படிகள் அதிகப்படியாகக் கூடச் சென்று விட்டனர்! உரிமை என்ற பெயரில் அந்நாடுகளில் நடைபெறும் ஆபாசங்கள் பற்றி அந்நாட்டவர்களே வருந்தத் தொடங்கியுள்ளார்கள். உரிமை என்பது வரையறை நன்கு கணிக்கப்படாத ஒன்று. பல சமயங் களில் நம்முடைய உரிமை என்பது அடுத்தவருடைய உரிமையில் கை வைப்பதாகக்கூட முடிந்துவிடுவதைக் காண்கிறோம். உதாரணமாக, ஒன்று காணலாம். அதிக விலை கொடுத்து வானொலிப் பெட்டி ஒன்றை அடுத்த வீட்டுக்காரர் வாங்கி வந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உரிமை பெற்ற இந்நாட்டில் தம்முடைய வானொலிப் பெட்டியை நேரம் காலம் இல்லாமல் வேண்டுமான அளவு சத்தத்துடன் திருப்பிவிடத் தமக்கு உரிமை உண்டு என்று நினைக்கின்றார் அவர்.

திருப்பிவிட அவருக்கு உரிமை உண்டு என்றாலும், அதன் பயனாக நம்முடைய காதுகள் செவிடாவது பற்றி யும் அவர் கவலைப்படத்தான் வேண்டும். தம்முடைய உரிமை ஒன்றோடு மட்டும் நின்று விடுவாரேயானால், உண்மையான உரிமையை அவர் உணர்ந்தவராக மாட்டார். உண்மை உரிமை ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காது. அப்படித் தீங்கு விளைவிக்கிற ஒன்றை நம்மவர் உரிமை என்று கூறியதே இல்லை.

மகளிர்க்கு உரிமை என்பது பற்றிக் குறள் தனியாக ஒன்றும் பேசவில்லை. அவ்வாறானால், மகளிர் உரிமை மறுக்கப்பட்ட காலமோ அது என்று யாரும் நினைக்க