பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 113

இவ்வருங்குறள் தோன்றியது தமிழ் நாட்டிலேதான் என்றாலும், “இக்குறள் கண்ட வாழ்வை நம் காலத்து வாழ்ந்த ஒரு பெருமகனார் வாழ்ந்தார்; அதனால் இக் குறளை மெய்ப்பித்து விட்டார்!’ என்றால் இதில் வியப் படைவதற்கு ஒன்றும் இல்லை.

1948-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 30-ஆந்தேதி மாலை, பலகோடி மக்கள் நிறைந்துள்ள இப்பரந்த இந்திய நாட்டில் எத்தனையோ மக்கள் பிறந்திருக்கவும் கூடும், இறந்திருக்கவும் கூடும். ஆனாலும், ஒரு மனிதர் இறந்த தற்காக ஊர், நாடு, உலகம் ஆகிய அனைத்துமே கவலைப் பட்டது. அந்த மனிதர் இறக்கும் பொழுது, செம்பால் அடித்த சல்லிகூட அவருடையது என்று சொல்லிக் கொள்வதற்கு இல்லை. மக்கள் உள்ளங்கலந்த அன்பால் வழங்கிய ‘மகாத்மா’ என்ற பட்டத்தைத் தவிர, அரசாங்கம் கெளரவித்துத் தந்த பட்டமோ, ஆட்சிப் பீடத்திற்குரிய அதிகாரமோ, ஒன்றும் அவரிடம் இல்லை. அதுதான் போகட்டும் என்றால், அவரைச் சிறந்த கல்விமான் என்றோ, அன்றி உலகத்தை வியப்பில் ஆழ்த்தும் விஞ்ஞானப் புதுமையைக் கண்ட அறிஞர் என்றோ, சொல்லிக் கொள்வதற்குக்கூட இல்லை. சுருங்கச் சொன்னால், பட்டம், பதவி, கல்விச் சிறப்பு முதலிய வற்றுள் யாதொன்றும் இல்லாத ஒரு சாதாரணப் பிரஜை என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும்

இந்திய நாட்டின் இப்படிப்பட்ட ஒரு சாதாரண பிரஜை இறந்து விட்டதற்காக, உலகத்திலுள்ள எல்லா அரசாங்கங்களும் (சோவியத் அரசாங்கம நீங்கலாக), எல்லாச் சமயத் தலைவர்களும் வணக்கம் செலுத்தி ாைர்கள். பணம் படைத்த அமெரிக்காவின் ஜனாதிபதி டுருமெனும், இறந்து போனவர் இறப்பதற்கு இரண் டாண்டுகள் முன் வரையில் யாருடன் போர் நிகழ்த்தி னாரோ, அந்த இங்கிலாந்து மன்னரும், பிரான்சு தேசத்து ஜனாதிபதியும், காண்டர்பரி மதத்தலைவர்

கு.- 8