பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 O அ. ச. ஞானசம்பந்தன்

ஆர்ச்சு பிஷப்பும், போப்பாண்டவரும், யூதர்கள் தலைவ ராகிய மதகுருவும் உட்பட அனைவரும் இந்தத் தனி மனிதர்- அரை நிர்வான தரித்திர நாராயணர்- இறந்த தற்குத் தம்முடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண் டனர். ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனம் தன்னுடைய நடைமுறை அலுவல்களை நிறுத்தி இந்தத் தனி மனிதருக்கு வணக்கம் செலுத்தியது. ஏன்? ஐக்கிய நாடுகளின் கொடியும் இறக்கிச் சரி பாதியில் பறக்கவிடப்பட்டது. அதாவது, மனித சமுதாயம் ஒரு மாணிக்கத்தை இழந்த தற்காகக் கொடியை இறக்கி வணக்கம் செய்தது.

‘உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்,” என்ற குறள் வாக்கு மெய்யானமையைக் கண்டோம். அன்று மட்டும் அன்றி, இன்றுங்கூட, இன்று மட்டும் அன்றி, என்றுமே இவ்வாக்கியம் மெய்யாகவே இருத்தலைக் காண்டல் கூடும்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சராய் இருந்த ஜெனரல் ஜார்ஜ் ஸி. மார்ஷல் இதனை மிகத் தெளிவுபட எடுத்துக் கூறியுள்ளார். ‘மகாத்துமா காந்தி மனித சமுதாயத்தின் மனச் சான்றாய் வாழ்ந்தார்!’ என்று அவர் கூறின பொழுது குறளின் இரண்டாவது அடியின் பொருளை ஐயத்திற்கு இடமின்றி எடுத்து விளக்கி விட்டார்.

சொத்து, சுதந்தரம், உடைமை முதலியவற்றுள் யாதொன்றும் இல்லாத ஒரு தனி மனிதர் இறந்துவிட்ட காரணத்தால், மனித சமுதாயம் ஒரு பெரு நஷ்டத்தை அடைந்ததாகக் கருதிற்று என்றால், அவர்கள் உள்ள த்துள் எவ்வளவு தூரம் இந்தத் தனி மனிதர் குடி புகுந்திருக்க வேண்டுமென்பது சொல்லத் தேவையில்லை.

இன்று உலகத்தில் மக்களின் உள்ளத்துள் வாழ்கின்ற பெருமக்கள் பலரும் தாங்கள் செய்த அருங்காரியங் களினால் மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்