பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. ‘கவரி மா(ன்) அன்னார்’


பிறப்பது பற்றியும் இறப்பது பற்றியும் கவலைப் படாமல் வாழ்கின்றவர் பலருண்டு. 'ஏன் பிறந்தோம்? என்ற கேள்வியைக் கேளாத வரை, தொல்லை ஒன்றும் இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்,’ என்று இருப்பவர்களை எவ்விதமான துன்பமும் இலேசில் வந்து அடைவதில்லை. பையன் பள்ளிக்கூடம் போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தால், மார்ச்சு மாதத்தில் எவ்விதக் கவலையும் படவேண்டுவதில்லை. ஆனால், நல்ல முறையில் பள்ளிக்கூடம் சென்று படிக்கவும் தொடங்கி விட்டால் பரீட்சை முதலிய கவலைகள் வந்து விடுகின்றன.

பிறந்துவிட்ட நாம், ஏதோ இறப்பு வருகின்றவரை இருந்துவிட்டு, போகின்ற நாளில் போய்விடலாம் என்று வாழ்ந்தால் கவலை இல்லைதான். வினாத்தாள் கடினமாக வரும் என்பதற்காக யாரேனும் பரீட்சைக்கே போகாமல் இருந்துவிட நினைப்பது உண்டா? கவலை இல்லாமல் வாழலாம் என்பதற்காக, வாழ்வில் மேற்கொள்ள வேண்டியவற்றை விட்டுவிட்டு வாழ முடியுமா?

மனிதனாய்ப் பிறந்த ஒருவனுக்கும், விலங்காய்ப் பிறந்த ஒன்றுக்கும் வேறுபாடு யாது? மனிதனுக்கு மனம் என்ற ஒன்று அதிகமாகத் தரப்பட்டுள்ளதே! அதை நன்கு பயன்படுத்தி வாழ வேண்டாவா? மனத்தைப்