பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 O அ. ச. ஞானசம்பந்தன்

சிந்தித்துப் பார்க்கவேண்டும். எல்லா வகை உறுப்புக் களும் நிறைந்து, அவை அவை அளவுடன் இருப்பினுங் கூடக் கண்ணில்லாவிட்டால், முகம் அழகு பெற்றது என்று கூறுவதற்கில்லை. ஏனைய உறுப்புக்களால் அழகு பெற். றிருப்பினும் கண்ணில்லாத பொழுது முகம் களை இழந்து காணப்படுவதைக் காணலாம். சிற்பக் கலையிலுங்கூட இவ்வுண்மையை அறியலாம்.

எவ்வளவு சிறந்த சிற்பமாயினும், கண் திறக்கப் படாவிட்டால், அச்சிற்பம் முழுத் தன்மையற்றதாகவே கருதப்படும். கை கால் முதலிய ஏனைய உறுப்புக்கள் சிதைந்து விட்டாலுங்கூடச் சிற்பத்தின் அழகு குறையாமல் இருப்பதையும் ஏனைய உறுப்புக்கள் அனைத்தும் இருந்து, கண் மட்டும் சிதைந்த வழி, சிற்பம் அழகு இழந்து நிற்பதையும் காண்கின்றோம். எனவே, எண் சாண் உடம்பிற்கும் கண்ணே பிரதானம், என்று சொல்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

விலங்கினங்களிலிருந்து மனிதன் வேறாகக் கருதப் படுவதற்கு முக்கியமான பல காரணங்களுள் அவன் மனமும் ஒன்று. அறிவு முதலியவற்றால் அவன் உயர் வுடையவன் என்று கருதப்பட்டாலும், அதனைக் காட்டிலும் சிறப்பாக மனத்தைப் பெற்றுள்ளமையால், சிறந்தவன் என்று கருதப்படுகிறான். அறிவின் பயனாக ஆராய்ச்சி தோன்றுவது போல, மனத்தில் கருணை அல்லது அன்பு என்பது தோன்ற வேண்டும்.

உள்ளத்தில் தோன்றும் கருணை பரந்து விரிந்து உலகிலுள்ள ஏனைய உயிர்கள் மாட்டுச் செல்கிறது, அவ்வாறு செல்லும் கருணையை ஒப்பு உயர்வு அற்ற ஒரு சிறந்த பொருளாக அனைவரும் கருதுகின்றனர். அன்பின் முதிர்ச்சியே அருள் என்று சொல்லப்படும். தொடர்பு உடையவர்களாகிய உறவினர் மாட்டுச் செல்வதே அன்பு எனப்படும். இது சாதாரண மக்களிடமும் காணப்படு: