பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 119

கின்ற ஒரு பண்பாகும். இதன் முதிர்ந்த நிலை அருள் என்று சொல்லப்படும். .ெ த .ா ட ர் பு உடையவர்கள் அல்லாமல், இன்னார் இனியார் என்று பாராமல், அனைவரிடமும் செல்கின்ற ஒன்றை அருள் என்று கூறு கின்றோம். அன்புதான் நன்கு வளர்ச்சி அடைந்து அருளாகப் பரிணமிக்கின்றது என்ற உண்மையைக் குறள் ‘அருள் என்னும் அன்பு ஈன் குழவி’ என்று அழகாகக் கூறுகிறது.

எனவே, மனிதன் தன்னிடம் இயல்பாக அமைந்துள்ள அன்டை (மனிதத் தன்மையின் அடையாளம் இது) மேலும் மேலும் வளர்த்து, அருளாகப் (தெய்வத் தன்மையின் அடையாளம் இது) பரிணமிக்குமாறு செய்வதே மக்கள் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டிய தலையாய கடமையாகும். ஒரு மனிதன் இங்ங்ணம் தன்பாலுள்ள அன்பை வளர்க்கின்றானா இல்லையா என்பதை எவ்வாறு அறிவது? அன்புடையவன் என்று ஒருவன் தன்னை வாய் நிறையக் கூறிக் கொள்ளலாமேனும், உண்மையில் அவன் அன்பற்ற மரமாகவே இருத்தல் கூடும். எனவேதான் உள்ளத்திலுள்ள அன்பை, அதன் முதிர்ச்சியாகிய அருளை, அறிந்து கொள்வதற்கு ஏற்ற கருவியாகக் கண்ணைப் பயன்படுத்தினார்கள்.

கண்ணோட்டம் என்பது வள்ளுவருடைய கருத்துப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய இன்றியமை யாத குணங்களுள் ஒன்றாகும். அரசர்களுக்குக் கூறும் இலக்கணத்துள் இது பேசப்பட்டாலும், மனித சமுதாயம் முழுவதற்கும் பொதுவானது என்பதை ஒவ்வொரு குறளிலும் எடுத்துக்காட்டுகிறார்.

சோழ நாட்டில் கஞ்சனூர் என்ற ஊரில் வாசு தேவாசாரியார் என்ற வைணவப் பெரியாருக்கு மகனாய்ப் பிறந்தவர் அரதத்தர்’ என்ற பெரியார். வடமொழியில் மிகச் சிறந்த புலமையுடைய இவர், எல்லா உயிர்களையும்