பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 O அ. ச. ஞானசம்பந்தன்

இறைவனுடைய வடிவங்களாகவே காணும் இயல்பைப் பெற்றிருந்தார்; தந்தையார் வழிவந்த ©öᎦY6üᏈᎢ ©Ꮋ வழிபாட்டை விட்டு, சிவ வழிபாட்டை மேற்கொண்டு, ‘அரதத்த சிவாசாரியார்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். ஒரு முறை இவர் சிவ பூசை செய்துகொண்டு இருக்கையில் நாய் ஒன்று நீர் வேட்கை மிகுதியால் இவர் பக்கத்திலே வந்து நின்று விட்டது. நாயின் நீர் வேட்கையை அதனுடைய தொங்கிய நாவிலிருந்தும், விருப்பத்தை விளக்கும் கண்களிலிருந்தும் கண்டு கொண்ட இப்பெரியார், உடனே ஒரு சிறிதும் ஆராயாமல், சிவபெரு மானுக்கு அபிஷேகத்திற்கு என்று வைத்திருந்த நீரை எடுத்து அந்த நாய் அருந்துமாறு வைத்துவிட்டார். ஒரு முறை பல அந்தணர்களோடு இருந்து உணவு உண்ணப் புகும் பொழுது தொழு நோயுடைய புலையர் ஒருவர் பசியால் வருந்துவதைக் கண்ட அரதத்தர், தாம் உண்ணு வதற்கு முன் அவருக்குத் தம்முடைய உணவைத் தந்து விட்டார். இவை இரண்டு காரியங்களாலும் அரதத்தர் ஒரு குறளுக்கு முற்றிலும் இலக்காய் விடுகின்றார்.

‘ கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃது இன்றேல்

புண் என்று உணரப் படும்’ என்ற குறளை வாழ்ந்து காட்டிய பெரியார் பலரும் உள்ளனர் இத்தமிழ் நாட்டில்.

இனி இத்தமிழ் நாட்டில் ‘சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற சேர மன்னன் ஒருவன் இருந்தான். அவன் கண்ணோட்டத்திலும் சிறந்து விளங்கினான். ஒரு முறை அவனைக் காண மோசி கீரனார்’ என்ற புலவர் வந்தார். அந்நிலையில் அரசன் வெளியே சென்றிருந்தான்; அவனுடைய முரசம் வைக்கப் படுகின்ற முரசு கட்டில் காலியாய் இருந்தது. முரசு கட்டிலில், முரசத்தைத் தவிர வேறு ஒருவருடைய கை அல்லது கால் படுமேயானால், அதற்குத் தண்டனை உடனே அந்தக் கையும் காலும் வெட் டப்படுவதுதான்.