பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 133

உடனே அவ்விடத்தைக் காலி செய்து குமரகுருபரருக்கு அளித்து விட்டதாக வரலாறு கூறுகிறது.

பூரீவைகுண்டத்தில் பிறந்து வளர்ந்த குமரகுருபரர் காசிக்குச் சென்று, தமிழே அறியாத மன்னனால், சைவ சமயத்திற்குப் புறம்பான முகம்மதிய மதத்தைச் சேர்ந்த ஒரு மன்னனால் மதிக்கப்பட்டார் எனில், அதற்கு யாது காரணம்?

இதோ குறள் விடையை அழகாகக் கூறுகிறது.

‘யாதானும் காடாமால் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு?’

‘கற்ற ஒருவனுக்கு எங்கே சென்றாலும் அது அவனுடைய நாடாகவும் ஊராகவும் அமைந்துவிடுமே! அவ்வாறு இருக்கவும், ஏன் மனிதன் கல்வியை விரும்பிக் கற்க வில்லை’ என்று கேட்கிறார் வள்ளுவர்.

காசிக்குச் சென்று முகம்மதிய மன்னனிடம் பரிசில் பெற்ற குமரகுருபரரும், அமெரிக்கா சென்று இந்நாட்டுப் பண்பாட்டைப் பரப்பிய இந்திய நாட்டின் இணையிலாத் துறவியாராகிய விவேகானந்தரும் இக்குறள் கண்ட வாழ்வின் உதாரணங்கள் அல்லரோ?