பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. வழியிலும் தூய்மை !

‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும், என்று ஒரு பழமொழி இந்: நாட்டில் வழங்குகிறது. எந்தப் புண்ணியவான் இந்தப் பழமொழியை உண்டாக்கினானோ தெரியவில்லை! அவன் யாராய் இருந்தாலும், தமிழ் நாட்டில் பிறந்து தமிழ்ப் பண்பாட்டை அறிந்தவனாக மட்டும் இருக்க முடியாது. குறள் பிறந்த தமிழ் நாட்டில் இத்தகைய ஒரு பழமொழி தோன்ற முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஒரு பொய் கூறாவிட்டால் ஆயிரம் கல்யாணம் நின்று போய் விடும் என்றாலும், பொய் கூறாதே! என்பதே இந் நாட்டுப் பழமொழியாக இருந்திருத்தல் கூடும்.

எவ்வளவு சிறந்த பயன் கிட்டுவதாயினும் சரி, வழி தவறானதாய் இருப்பின் அப்பயனை அடைய முயற்சி செய்ய வேண்டா என்பதே இந்நாட்டவர் கண்ட உண்மை. ஆனால், வாழ்க்கைப் போராட்டத்தில் எவ்வித மாயினும் முன்னேறி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது மிகுந்துள்ளது. இந்நாட்டவர் பிற நாட்டவருடன் தொடர்பு கொண்டதனால் பெற்ற முதற்பயனாகும் இது.

மேலை நா ட் டா ரே வெற்றியைப் பெரிதாகப் பாராட்டினர்; வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை மதித்தனர். நம்மவர், நல்ல வாழ்வு வாழ்.