பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 185

வதையே, பிறருக்குப் பயன்படும் வாழ்வு வாழ்வதையே பெரிதாக மதித்தனர். வாழ்க்கையில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் அமைதியுடன் வாழ்வதையே, சிறப்பாக நம்மவர் மதித்தனர்.

“கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்,’ என்றெல்லாம் சொல்லி, இறுதியில், சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற “திறம் அரிது!’ என்று கூறினார்கள். எனவே, வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியேயாகும்.

எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறுவதை வேண்டா என்று கூறவில்லை; ஆனால், அவ்வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக் கலப்பும் இருத்தல் கூடாது என்று கூறினர். தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்திராது; இருக்கின்றவரை இன்பமும் தாராது.

மேல் நாடுகளில் எவ்வாறாயினும் வெற்றி பெற வேண்டும் என்று கருதிய ஒரு கூட்டத்தார், பயனை அடையக் கூடுமானால் எல்லா வழியும் சிறந்ததுதான்’ (End justifies the means) aré, D. & sóloorst. -gorld விஷயங்கட்கு ஏற்பட்ட இந்தப் பழமொழி, நாளாவட் டத்தில் எல்லா விஷயங்கட்கும் பயன்படலாயிற்று. ஒரு சிலர், எந்த வழியையாவது கடைபிடித்து வெற்றி பெற்று விட்டால், அதனைக் காண்கின்ற மற்றவர் மெள்ள மனம் மாறத் தொடங்குகின்றனர்.

சிறிது காலம் வரை மனத்தைச் சமாதானம் செய்து வைத்திருப்பினும் வெற்றி பெறுபவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு சபலம் தட்டுகிறது. நேர்மையான வழியில் சென்றால் வெற்றி அவ்வளவு சுலபமாகவும், விரைவாகவும், நிறைந்த அளவிலும் கிடைப்பதில்லை.