பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 O அ. ச. ஞானசம்பந்தன்

எனவே, விரைவில் நிறைந்த அளவில் வெற்றி பெறு பவரைக் கண்டவுடன் மனத்தில் சபலம் தட்டுவது இயற்கைதான்.

வலுவான நெஞ்சுரம் உடையவர் மட்டுமே இதனை எதிர்த்துப் போராட முடியும். வெற்றியை எதிர்த்துப் போராடுதல் எவ்வளவு கடினமானது என்று கூறத் தேவையில்லை. அதிலும், வெற்றி எளிதாகக் கிடைக்கிறது; ‘கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் வந்து விட்டது: இதோ கிடைக்கப் போகிறது!’ என்று கூறக் கூடிய நிலையில், அந்த வெற்றியை உதறித் தள்ளுவது அருமை யினும் அருமை. அவ்வாறு வெற்றியை உதறித் தள்ளுவது ஒரு மகாத்மாவுக்குத்தான் முடியுமே தவிர, சாதாரண மனிதருக்கு இயலாத காரியமே.

ஏன் வெற்றியை உதறித் தள்ள வேண்டும்? வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இல்லாமையே காரணம்! எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும், அது எவ்வளவு சிறப்புடையதாயினும் சரி, அந்தக் காரியத்தைச் செய்யும்பொழுது தூய்மையான வழியை மேற்கொள்ளு கிறோமா என்பதே வினா. சிறந்த வழி மூலம் பெறும் ஊதியம் சிறியதாக இருப்பினும், அதுவே போதுமானது என்று பெரியோர் கூறினர்.

‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம்,’ என்று குறள் கூறுவதும் இதையேதான். பிறர் அழும்படியாகப் பெற்றவை அனைத்தும், பெற்றவர்களை அழவைத்து விட்டுத் தாமும் போய்விடும். வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமாகும் அதற்கு மேற்கொள்ளும் வழியின் தாய்மையைப் பாதுகாப்பதும். இது கருதியே குறள் வினைத்துய்மை’ என்னும் ஒர் அதிகாரமே வகுக்கின்றது.

வெற்றியைக் கருதித் தவறான செயல்களைச் செய்யக் கூடாது என்று கூறும் பொழுது ஒரு சிலருக்குச் சந்தேகம்