பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வித்தில்லாத விளைச்சல் !

‘என்ன ஐயா, வீட்டில் விருந்து மிகவும் தடபுடல் போல இருக்கிறதே!’ என்று கேட்கின்றோம். கேட்கப் பட்டவர்கள், அசட்டுச் சிரிப்புடன், “ஆமாம்! மதிப்பிற் குரிய ஒருவர் மிக நீண்ட காலம் கழித்து விருந்தினராக வந்திருக்கிறார். ஆகவே, கொஞ்சம் அதிகப்படியான சமையல்,’ என்று சொல்லுகிறார். யாருக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு விருந்து தயாரிக்கிறார் என்று பார்த்தால், 99 சதவிகிதம் இவருடைய உறவினருக்காக அல்லது ‘காக்காய் பிடிக்கப்பட வேண்டிய ஒருவருக்காக இருக்கும்.

உறவினராக இருப்பவர்களுள்ளும் பல ரகங்கள் உண்டு. ஒரு சில உறவினருக்கு நம்முடைய வீட்டில் அன்றாடம் நடைபெறுகின்ற சமையலில் ஒரு பகுதியே விருந்து உணவாகக் கிடைக்கும். இன்னும் ஒரு வகை உறவினருக்கு அதுவும் கிடைக்காமல் போகலாம். மூன்றாம் இனத்தாருக்கு மிக அதிகப்படியான விருந்து உபசாரம் நடைபெறும். இதனுடைய காரணத்தை அறிய அதிக தூரம் செல்ல வேண்டுவதில்லை. விருந்தை ஏற்றுக்கொள்ளுகின்றவர்களுடைய தகுதி, செல்வ நிலை இவற்றைப் பொறுத்தே விருந்தின் தரமும் நிர்ணயிக்கப் படுகிறது.