பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 O அ. ச. ஞானசம்பந்தன்

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு சிரமப்பட்டு நம்மால் விருந்துபசாரம் செய்யப்படுகிறவர் இந்த விருந்தை ஏற்றுக்கொள்ளும் உடல்நிலையோ, மன நிலையோ இல்லாதவராய் இருக்கின்றார். அதாவது, பெரிய மனிதர்களுக்குரிய சிறப்பு நோயான டிஸ்பெப் வியா போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்ட உடலை உடையவராய், எப்பொழுதும் கவலை தோய்ந்த மனத்தை உடையவராய் இருப்பதோடு, தம்முடைய வீட்டிற்கு வருகின்ற அதே நேரத்தில் வேறு எங்காவது ஒர் இடத்தில் சிற்றுண்டி என்று சொல்லப்படுகின்ற. பேருணவை உண்டுவிட்டு வந்திருப்பார். எனவே, நம்முடைய விருந்தை உண்பதற்கு வாய்ப்பு, ஒருசிறிதும் அவரிடம் இல்லாமற் போய்விடும்.

இதைவிட வருந்தத் தகுந்த நிலை என்னவென்றால், எல்லை மீறிய சிரமம் எடுத்துக் கொண்டு நாம் தயாரித்த, உணவை அவர் உட்கொள்ளாமல் ஒதுக்குவதைப் பார்த்து மனம் வருந்தி, ‘ஐயா, உங்களுக்காகவே இவ்வரிய விருந்தை தயாரித்தேன். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விடுவது வருத்தமாய் இருக்கிறது!” என்று எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகி அவரிடம் பேசுகிறோம். அதுபற்றி ஒரு சிறிதும் கவலைப் படாமல் அப்பெரிய மனிதர், ‘வருகின்ற வழியில் பத்மபூஷணம் பரதர் மிகவும் உபத்திரவப்படுத்தினார். சாப்பிடாமல் அனுப்ப மறுத்துவிட்டார். ஆகையினால், அவருடைய வீட்டில் கொஞ்சம் கையை நனைத்துவிட்டு வந்தேன்,’ என்று விடை கூறுகிறார். சிரமப்பட்டு விருந்து தயாரித்த நம்முடைய மனநிலை எப்படி இருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. -

இத்தனை தொல்லைகளும் ஏன் விளைகின்றன? விருந்தினர் அல்லாதவர்களை விருந்தினர் என்று நினைத்துக் கொண்டு நாமும் அல்லற்படுகிறோம், அவர் களையும் அல்லற்படுத்துகிறோம். பின்னர்க் கிடைக்கப்.