பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 அ. ச. ஞானசம்பந்தன்

என்று அவனுடைய மைந்தர்கள் ஒரு நாளும் தம்முடைய ஈகைத் தன்மையிலிருந்து மாறப் போவதில்லை என்பதே இதன் பொருள்.

விருந்தோம்பல் என்பது பரம்பரையாக வருகின்ற ஒப்பற்ற தமிழ்ப் பண்பாடு என்று கூறினால், அதில் தவறு இல்லை. விருந்தோம்பல் என்ற பண்பாட்டிற்கும், செல்வ. நிலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. பல சமயங். களில் செல்வ நிலை குறையக் குறைய இப்பண்பாடு மிகுந்து கொண்டு செல்வத்தைக் காணலாம். அவ்வாறா னால், கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு விருந்துக் ச ைம ய ைல ப் பற்றிக் குறிப்பிட்டோமே, அது. விருந்தோம்பலில் அடங்காதா என்ற வினாத் தோன்ற லாம். உண்மையில், அது விருந்தோம்பல் அன்று. ஒன்று, கடமை என்று சொல்ல வேண்டும்; அன்றேல், அதனை வேறு ஏதாவது பெயர் கொடுத்து வழங்க வேண்டும்.

கற்றோர் இதயம் களிக்கும் முறையில் இராமாயணத் தைப் பாடிய கம்பநாடனை வைத்து உபசரித்த பெருமை வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலுக்கே உரியது. அப்பெரு வள்ளல் எத்தகையவர்களை வரவேற்று உபசரித்தான் என்பதைக் கம்பநாடனே பாடுகின்றான். அந்த உபசரிப்பின் பெருமையைக் கூற வந்த கம்பன், சேதுபந்தனப் படலத்தில் அழகிய ஒரிடத்தில் சடையனின் விருந்தோம்பும் பெருமையை எடுத்துக் கூறுகிறான்.

சேதுபந்தனம் செய்வதற்காக வேண்டிய கற்களை எல்லாம் மிகப் பெரிய மலைகளிலிருந்து பெயர்த்து, விரைந்து எடுத்து எல்லாக் குரங்குகளும் எறிகின்றனவாம். பல குரங்குகள் பல திசைகளிலிருந்தும் பற்பல வேகத் துடன் எறிகின்ற பல்வேறுபட்ட அளவுடைய கற்களை எல்லாம் நளன் என்று சொல்லப்படும் கல் தச்சன் மிகவும் இலாகவமாக வாங்கி அந்த அணைக்குப் பயன்படுத்துகி. றானாம். இக்கருத்தைச் சொல்ல வந்த புலவன், சடைய