பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 151

னுடைய விருந்தோம்பலுக்கும் இதனையே நிலைக்களம் ஆக்குகின்றான்.

‘மேக மண்டலத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கின்ற மலைகளைப் பெரிய குரங்குகள், மிகவும் ஆத்திரத்தோடு எடுத் து எறிய, நளன் என்னும் தச்சன் மிகவும் இலாகவ மாக அக்கற்களைத் தாங்கி விட்டான். எது போல எனில், சடையப்ப வள்ளல் ஒருவனே திருவெண்ணெய் நல்லூரிலே தஞ்சம் என்று வந்தவர்களை எல்லாம் தாங்கு கின்ற தன்மையைப் போல, என்னும் கருத்தில்,

‘ மஞ்சினில் திகழ்தரு மலையை மாக் குரங்கு எஞ்சுறக் கடித்து எடுத்து எறியவே களன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்’ என்று பாடுகின்றான்.

இப்பாடலில் உள்ள சிறப்பை அறிய வேண்டும். குரங்குகளால் எடுத்து எறியப்பட்ட மலைகள், மேகஞ் சூழ்ந்த மலைகள் என்று புலவன் சொல்லுகிறான். இதற்கு உவமையாக உள்ளவர்கள் சடையனிடத்தில் விருந்து உண்ண வருகின்றவர்கள். அதாவது, சடைய னிடம் பசியினால் உந்தப்பட்டு வருகின்றவர். மலையைப் போன்ற கெளரவம் உடைய பெரியவர்களும், மலையடி வாரத்தைப் போன்ற சாதாரண நிலையிலுள்ள சோற்றுத் துருத்திகளும் ஆவர். அந்தப் பெரிய மலைகளைக் குரங்குகள் எடுத்து எறிகின்றன என்று சொல்வதுபோல இந்தப் பெரியவர்களைப் பசி என்ற குரங்கும் வறுமை என்ற குரங்கும் இடம் விட்டு விரட்டுகின்றன.

சாதாரணமாகக் கட்டடவேலை செய்கின்ற இடத்தில் நின்று பார்த்தால், ஒர் உண்மை விளங்கும். கற்களை எடுத்து வீசுவார் ஒருவர். அவற்றை மிக இலாகவமாக மற்றொரு பெண் வாங்கி வைப்பாள். அந்த இலாகவம் இல்லாவிட்டால், எறியப்பட்ட கற்கள் வாங்குபவரின்