பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 C அ. ச. ஞானசம்பந்தன்

மனநிலையைக் கண்டு கிருபளானியும் பண்டித நேருவும் அவர்பால் அடிமையாயினர். சமயவாதியாகவும் கர்ம வீரராகவும் நின்று பணி புரியும் அவருடைய செயல் திறம் மெளலானா ஆஸாத்தைக் கவர்ந்தது. ஆசார்ய வினோ பாபாவே அடிகளைப் பழைய நாளைய அடியாராகவே மதித்தார்.

ஆம்! இத்துணை வேறுபாடு உடையவர்களும் ஒருவரை மதித்தார்கள்; மதித்தது மட்டுமா? கை கூப்பியுந் தொழுதார்கள். நண்பர்களாகிய அவர்கள் மட்டுமா? அடிகளை முதன்முதலில் விசாரித்துத் தண்டித்த நடுவணர் “புரூம்பீல்டு தண்டனையை அளிக்கு முன் அடிகளை வணங்கிவிட்டுக் கூறிய சொற்கள் நினைவில் இருத்த வேண்டுபவை: ‘சட்டம் இன்னார் இனியார் என்று பார்ப்பதில்லை. என்றாலும், என் வாழ்நாளில் உங்களை ஒத்த ஒருவரை இதுவரை விசாரித்ததில்லை; இனியும் விசாரிக்கப் போவதில்லை. உங்களோடு அரசியலில் மாறுபடுகின்றவர்களும், உங்கள் உயர்ந்த குறிக்கோளை யும் தூய அடியார் வாழ்க்கையையும் மறுப்பதற்கில்லை.”

இவ்வாறு நண்பர், நொதுமலர், பகைவர் ஆகிய அனைவரும் வணங்கும் நிலையைத்தான் குறள்,

‘ கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி

எல்லா உயிரும் தொழும்’ என்று கூறுகின்றது.

‘புலாலை மறுத்தானை’ என்ற தொடரால் உணவைப் பற்றிக் குறளாசிரியர் கூறிவிட்டார். அப்படியானால் கொல்லாமை’ என்ற சொல்லின் பொருள் யாது? சத்தியாக்கிரகி மே ற் .ெ கா ன் ட (Non-violence) கொல்லாமையையே அச்சொல் குறிக்கின்றது.

அத்தகைய ஒரு சத்தியாக்கிரகியை எல்லா உயிரும் தொழுவதில் வியப்பில்லை. அதுவே குறள் கண்ட ..உண்மையும் ஆகும்.