பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. நுனிக் கொம்பு

‘இன்று இன்னாருடைய சொற்பொழிவாமே! சென்று வரலாமா?’ என்று கேட்கிறார் ஒருவர். “அவரா! புண் ணியவான் தொடங்கிவிட்டால் எப்பொழுது முடிப்பதென்று அவருக்கே தெரியாதே! மணிக்கணக்கில் வளவள வென்று பேசிக்கொண்டே இருப்பார்!’ என்று பதில் கிடைக்கக் காண்கிறோம். சொற்பொழிவைத் தொடங்கிவிட்டால், எப்பொழுது நிறுத்துவது என்று தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பவர்களும் உண்டு.

பலர் உண்மையிலேயே மிக நல்ல முறையில்

சொற்பொழிவு செய்யினும், எப்பொழுது நிறுத்த வேண்டும் என்பதை அறியாமையால், பிறரால் எள்ளி நகையாடப்படுகின்றனர். சொற்பொழிவு செய்தல் எவ்வாறு ஒரு சிறந்த கலையோ, அதைவிடப் பெரிய கலை, நேரம் தெரிந்து அதனை நிறுத்திக் கொள்வது. சொற்பொழிவு செய்பவர்கள் எந்த அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளாமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே செல்வார்களாயின், அதனால் விளையும் பயனைப் பற்றிக் கூற வேண்டுவதில்லை. கூட்டத்தில் உள்ளவர் அனைவரும் எழுந்து சென்று விடுவர்.

எந்த அளவு வரையில் செல்லலாம்? எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும்?’ என்ற திட்டங்கள்