பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 27


குறித்திருந்தார். விடிந்தால் குடமுழுக்கு நடைபெற வேண்டும். காஞ்சீபுரம் அல்லோல கல்லோலப்படுகின்றது: கும்பாபிஷேகத்தின் முதல் நாள் இரவு, பல்லவன் கனவில் இறைவன் தோன்றினான்; அப்பனே, திருநின்றவூரில் வாழும் பூசலார் பல நாளாய் முயன்று கட்டிய கோவிலுக்கு நாளைக் குடமுழுக்குக் குறித்துள்ளார். அங்கு யான் செல்ல வேண்டும். எனவே, உன் கோயிற் குடமுழுக்கைத் தள்ளி வைத்துக்கொள்,’ என்று கூறினான்.

“ ‘நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம்; நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்’ என்று
கொன்றைவார் சடையான் அன்பர் கோயில்கொண்டு அருளப் போந்தார்.”

விழித்து எழுந்தான் மன்னன்; பதறிவிட்டான். எவ்வளவோ முயன்று தான் கட்டிய கோயிலின் குடமுழுக்கைத் தள்ளி வைத்துக்கொள்ள வேண்டுமாம்! இது இறைவன் கட்டளை. யார் அந்தப் பூசலார் தன் கோயிலைவிட அவர் கட்டிய கோயில் எவ்வாறு சிறந்தது? அது சிறந்தது என்பதனால் தானே இறைவன் அங்கே செல்வதாகக் கூறிவிட்டான்? தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் பல்லவன் கோயிலை அறியுமே! ஆனால், காஞ்சியை அடுத்து இருபது கல் தொலைவில் உள்ள திருநின்றவூரில் இறைவனும் விரும்பும் ஒரு கோயில் தோன்றுவதானால், அது அரசனாகிய தனக்குத் தெரியாமலா போயிருக்கும்?

இவ்வாறு நினைந்த அரசன் உடனே புறப்பட்டான் பூசலார் கோயிலைக் காண. திருநின்றவூரில் வந்து அரசன் கோயில் எதனையும் காணாமல் திகைத்தான்; ஊராரை விசாரித்துப் பூசலார் தங்கியுள்ள இடத்தை அடைந்தான்; ‘ஐயரே, நீவிர் கட்டிய கோயில் எங்கே? அதைக் காணத் துடிக்கின்றேன்!’ என்றான். வியப்பில் மூழ்கிவிட்ட