பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 O அ. ச. ஞானசம்பந்தன்


அடையலாம் என்ற ஒரே எண்ணந்தான் அவர்கள்” மனத்தில் அல்லும் பகலும் குடி கொண்டு இருக்கும். இவ்வளவு இருந்தும், அவர்களிடம் ஒரு நன்மை உண்டு. எப்பொழுதும் புன்சிரிப்புடன் மிக நயமான வார்த்தை களையே பேசுவார்கள். எட்டிப் பழம் போன்றவர்கள் அப்புண்ணியவான்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகு உடையதாகக் காணப்பட்டு, உண்டவரைக் கொல்லும் எட்டிப் பழம். அவர்களும் நயமாகப் பேசித் தம்மிடம் வந்தவர்களைத் தம் நலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் சக்கையை எறிவது போல எறிந்துவிடுவார்கள். முதல் வகையார் பலாப்பழம் போன்றவர். பலாப்பழம் பார்வைக்கு முசுடும், முள்ளும் நிறைந் துள்ளது. பொறுத்துக் கொண்டு அறுத்துப் பார்த்தால், உள்ளே சுவை நிறைந்த சுளை இருப்பது போல அவர்கள் இனிய பல பண்புகள் நிறைந்தவர்களாயிருப்பார்கள்.

பலாப்பழத்தை ஒத்த பண்பாடு உடையவர்கள் சிறந்தவர்களாயினும், அவர்களால் உலகத்துக்கு அதிக நன்மை இல்லை. ஏனெனில், அவர்களிடம் பழகுகின்ற வர்கள் பல நாள் பழகி அவர்கள் மன நிலையை அறிந்து கொண்ட பின்னரே உண்மையை அறிய முடியும். அவ்வளவு தூரம் பழகுவதற்கு முன்னரே பலாப்பழத்தை ஒத்தவர்களுடைய முள் போன்ற வாய்ச்சொற்கள் பழகு பவரை வெருட்டிவிடும். இத்தகையவர்களால் உலகத் திற்கு அதிக நன்மை உண்டு என்று கூற முடியாவிடினும், எட்டிப் பழம் போன்ற இரண்டாவது வகையைச் சேர்ந்த வர்களால் உலகிற்குத் தீமையே விளையும்.

'பலாப்பழம் போன்றவரால் நன்மை இல்லை; எட்டிப் பழம் போன்றவரால் தீமை விளையும்' என்றால் பிறகு எப்படிப்பட்டவர்களால்தான் நன்மை விளையும்? அகத்தே தூய்மையும் புறத்தே இன்சொல்லும் உடையவர்களாலே தான் உலகம் பயன் அடைய முடியும். அகத்தே தூய்மை