பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 O அ. ச. ஞானசம்பந்தன்


களால் அது ஏற்படும். முதலாவது காரணம், அவர் நற்பண்புகள் உடையவர் யார் மாட்டும் இரக்கமுடை யவர் என்பதால் ஏற்படுவது. இக்காரணத்தால் ஏற்படும் நட்பில் இரண்டுபேரும் இலாப நஷ்டக் கணக்குப் பாராதவர். தூய அன்பு ஒன்றைத் தவிர வேறு எந்தப் பயனையும் கருதமாட்டார் இருவரும். இத்தகைய அன்பைத் தான் காதல் என்று கூறுகின்றோம். இரண்டு ஆடவர்களுக்கு இடையே இது ஏற்படின் நட்பு என்றும் ஆடவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்டால் காதல் என்றும் கூறுகின்றோம். எந்தப் பெயரிட்டு வழங்கினாலும் தூய அன்பு தவிர வேறு அடிப்படை இங்கு ஒன்றும் இல்லை.

இரண்டாவது, ஒரு காரணத்தால் நட்புச் செய்பவர் களும் உண்டு. இதன் அடிப்படை ரூபாய் ஆணா பைசா தவிர, வேறு ஒன்றும் இல்லை. பையில் கனம் இருப்ப வருடன் ஒகோ’ என்று நண்பர் குழாம் நிறைந்துவிடும். அவர் பை காலியானவுடன் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல இந் நண்பர் குழாமும் மறைந்துவிடும்.

பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் நட்பு முற்றிலும் முதல் வகையையே சேர்ந்தது. இதற்கு ஆதாரம் தேடி அதிக தூரம் செல்ல வேண்டா. இவர் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டதே இல்லை; ஒருவரைப் பற்றி மற்றவர் கேள்விப்பட்ட அளவிலேயே இருந்தனர். அவ்வாறு இருந்தும் ஆழ்ந்த நட்புக் கொண்டனர்.

அவ்வாறானால் இவர்கள் நட்பும் மேற்போக்காக இருந்திருக்கும் போலும் என்று நினைப்பது தவறு. ஓயாமல் ஒவ்வொருவரும் மற்றவரைப்பற்றியே நினைந்து கொண்டிருந்தனர். எவ்வளவு தூரம் ஒருவர் மற்றவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டுப் போதுமானது. பிசிராந்தையாரை யாரேனும் 'நீர் யார்?’ என்று கேட்டால், ‘யான் பேதைச்