பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. நுணங்கிய கேள்வி


“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை," என்பது இந்நாட்டில் வழங்கும் பழமொழி. அதாவது, நல்ல சுவையுடைய சர்க்கரை அகப்படாத ஊரிலுள்ளவர்கள், ஓரளவு சுவையுடைய இலுப்பைப் பூவைத் தின்று விட்டு, அதைவிடச் சுவையுடைய வேறு பொருள் உலகில் இருக்க முடியாது என்று முடிவு செய்து கொள்வார்களாம். அதே போலக் கற்றறிந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்ற நம்முடைய நாட்டில், கற்றவர் கர்வம் கொள்ளுதல் இயல்பு என்று சிலர் நினைக்கலாம்.

கல்வியை நம்மவர்கள் இரண்டாகப் பிரித்துள் ளார்கள். ஏட்டுக் கல்வி என்றும், அனுபவக் கல்வி என்றும், அது இரண்டு வகைப்படும். முழுவதும் ஏட்டுக் கல்வியைக் கற்ற ஒருவனும், முழுவதும் அனுபவக் கல்வியே பெற்ற ஒருவனும் முற்றிலும் கற்றவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். இவை இரண்டு கல்வியும் சேரும் பொழுது தான் கல்வி முழுத் தன்மையை அடைகிறது. இவ்விரண் டையும் சேர்த்துப் பொதுவாக வழங்கப்படும் கல்வி என்பதுகூட இரண்டு வகையில் கற்கப்படும். முதலது நூலைத் தானே கற்றல்; இரண்டாவது, கற்றறிந்தவர்கள் கூறுவதைச் செவி மூலம் கேட்டு அறிந்து கொள்ளுதல்.