பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 O அ. ச. ஞானசம்பந்தன்

கும், உணவு விடுதியில் கிடைக்கும் உணவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை! ஆனால், உணவு விடுதிச் சாப்பாட்டைவிட வீட்டு உணவு உடம்புக்கு ஏற்றது என்று ஏன் சொல்கிறோம்? பல பேருக்குச் சமைக்கின்ற உணவு விடுதியில் செய்யப்படும் உணவைக் காட்டிலும், சிலருக்குச் சமைக்கின்ற வீட்டு உணவு ருசி உடையதாக இருக்கும் என்பதற்காகவா? உண்மையை நோக்குமிடத்து வீட்டில் செய்யப்படும் உணவில் உணவுப் பொருள்களின் சேர்க்கை மட்டும் இல்லை. உணவைச் சித்தம் செய்பவர்கள், அன்பு என்ற ஒன்றைக் கலந்தே உணவைத் தயாரிக்கிறார்கள். அதனாலேதான் வீட்டு உணவு உயர்ந்த தாய் இருக்கிறது.

கணவன் மேல் கொண்ட அன்பு மனைவியின் மனத்தில் இருப்பதனால் அந்த உணவு சுவையுடையதாய் இருக்கிறது. அதனை உண்ணுகின்ற கணவன், மனைவி செய்த உணவை உண்ணும்பொழுது அவள் அன்பையும் தினைந்து பார்ப்பானேயானால், அவனையும் அறியாமல் அவன் மனத்தில் நன்றிப் பெருக்கம் ஏற்படும். உலகத்தில் ஒவ்வொருவர் செய்கின்ற உதவியையும் இப்படியே நினைந்து பார்த்தால், ஒவ்வொருவரும் மற்றவர்க்கு நன்றி பாராட்ட வேண்டுவது கடமை என்பது நன்கு விளங்கும்.

இப்படியிருந்தும், பெரும்பாலான மக்கள் ஏன் நன்றி பாராட்டுவதில்லை? இதற்கு விடை காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு மனிதனும் பிறருடைய உபகாரத்தைப் பெறும்பொழுது, அவர்கள் தனக்கு உபகாரம் செய்ய வேண்டுவது கடமை என்றும், தான் அதனை ஏற்றுக் கொள்வது நியாயம் என்றும் நினைக்கிறான்; ஏதோ தனக்கு உபகாரம் செய்வது செய்கிறவர்களுடைய பாக்கியம் என்றும், தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் நினைக்கின்றான். இதனாலேதான் நன்றிப் பெருக்கம் அவனிடம் ஏற்படுவ அதில்லை.