பக்கம்:குறள் நானூறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் உறுதி என்பது அவனது மன உறுதியே ஆகும். மன உறுதி இல்லாமல் செய்யப்படும் பிற எல்லாம் நிலைத்து நிற்காது விரைந்து மறையும் பயனையே தரும். 盛&巫

எடுத்த செயல் முடிவடையும் இறுதிவரை அதன் நோக்கம் வெளிப்படாமல் காக்க வேண்டும். அஃதே ஆண்மை. இடையில் நோக்கம் வெளிப்பட்டால் தள் ள முடியாத இழிவான மனத் துன்பத்தைத் தரும். 222

இச்செயலை இத்துணைச் சிறப்பாகச் செய்து விடுவேன்’ என்று வாயால் சொல்லுதல் எவருக்கும் எளிதாகும். சொல்விய முறையில் செய்து நிறைவேற்று தல் அருமையாகும். 223

ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் அச்செயலில் ஊன்றிய மன உறுதி உடையவர் ஆகவேண்டும். உடையவராகச் செயலாற்றினுல் பெற நினைத்தவற்றை எலலாம் நினைத்த பாங்கிலேயே பெறுவர். 224

உருண்டு ஓடும் மிகப்பெரிய தேருக்கு மிகச்சிறிய அச்சானி இன்றியமையாதது. அதுபோன்று மிகப் பெரும் செயலுக்கு உருவத்தில் மிகச் சிறியவர் இன்றிய மையாதவராக இருப்பர். எனவே, ஒருவரது சிறிய உருவத்தைக் கண்டு அவரை எளியவராக நினைத்தல் கூடாது. 225

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/104&oldid=555601" இலிருந்து மீள்விக்கப்பட்டது