பக்கம்:குறள் நானூறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சித் தலைவரைச் சேர்ந்து ஒழுகுகின்றவர் ஆட்சித் தலைவர் எம்மைவிட இளையவர் என்றும், இன்ன முறை உறவினர் என்றும் கருதித் தாழ்வாக்கிப் ப்ழகக் கூடாது அவரது புகழ் பொருந்திய தகுதிக் கேற்பப் பணிவாகப் பழக வேண்டும். 忍ö惠 பளிங்குக் கல் தன்னை அடுத்து எதிரே அமைந்த பொருளின் உருவை அவ்வாறே காட்டும். அதுபோன்று உள்ளத்தில் உண்டான உணர்ச்சியையும் முகம் குறிப் பாகக் காட்டும். அதுகொண்டு மனக்குறிப்பை அறிதல் வேண்டும். $ 露32 முகக்குறிப்பு, பார்வைக் குறிப்பு, சொற்குறிப்பு முதலிய குறிப்புகளால் மனக்குறிப்பை உணர்பவர் கிடைத்தற்கு அருமையானவர். அவரைத் தனது முகம் கண் வாய் முதலிய உறுப்பினுள் எதைக் கொடுத் தாகிலும் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். 23.3

தனக்கு மேலுள்ளவர் ஒன்றை வாய்ச் சொல்லால் வெளியிட்டுச் சொல்லுமுன், முகக்குறிப்பால் அறிந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு குறிப்பறிந்து செய லாற்றுபவன் திறனுளன். அவன் கடல் சூழ்ந்த இந்த வையத்திற்கு மாற்ற வேண்டாத அணிகலனுய் அழகு தருவான். 2:34

தன் தலைவனது மனக்கருத்து இதுதான் என்று ஐயம் இல்லாமல் குறிப்பால் அறிந்து உணர்பவன் மிகச் சிறந்த திறனுளன். அவனத் தெய்வத்தோடு ஒப்பாக வைத்துப் போற்ற வேண்டும். 235

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/108&oldid=555605" இலிருந்து மீள்விக்கப்பட்டது