பக்கம்:குறள் நானூறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் செய்த தவற்றுக்குத் தலைகுணிதல் ஆண்கள் கொள்ளத் தக்க நாணம். அந்த நா எண் உடைமை சான்ருேர்க்கு ஒர் அழகு! அங்கனமின்றித் தவறு செய்து தலை நிமிர்ந்து நடக்கும் பெருமித நடை ஒரு வகை நோய் ஆகும். 33

மரத்தால் செய்யப்பட்ட பொம்மையைக் கயிற் றைக் கட்டி ஆட்டுவதால் உயிர் உள்ளது போன்று இயங்கிக் காண்போரை மயங்க வைக்கும். அது போன்றே, உள்ளத்தில் நாணங் கொள்ளாதவர் இயக்கமும் உயிரோட்டமற்றதாக மயங்கவைக்கும்.

品忍差 தான் பிறந்த குடும்பத்தை நற்பெயரோடு ஆளும் ஆண்மையை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். அஃதே ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சிமப்பித்துக் கூறப் படும். - 323 தான் பிறந்த குடியை மேம்படுத்த இந்தப் பருவத் தில்தான் செயலாற்ற வேண்டும் என்று ஒரு பருவம் இல்லை. எப்பருவத்திலும் செயலாற்றலாம். சோம்பல் கொண்டு வீண் தன்மானத்தைக் கருதினுல் குடி கெடும். 324

ஒரு குடிக்கு இடையூறு நேர்ந்தபோது அடுத்தி ருந்து இடையூறு போக்கித் தாங்கவல்ல நல்ல ஆண் வேண்டும். அத்தகைய ஆள் இல்லாத குடியை. வந்த இடையூறு குடும்பத்தின் ஆண்வேரைக் கொல்லும்; குடி வீழும். - $25

133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/144&oldid=555641" இலிருந்து மீள்விக்கப்பட்டது