பக்கம்:குறள் நானூறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கொண்ட காதல் நோயைப் பிறர் அறிந்து கொள்ளாமல் மறைக்க முயல்கின்றேன். ஆனால், மணற் கேணியை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் ஊறிப் பொங்குவது போன்று பொங்கி வெளிப்படுகின்றது.361

காதலருடன் கூடியிருக்கும் போது காதல் விளைக்கும் இன்பம் கடல் போன்றது. அதே காதல் பிரிவால் வருத்துங்கால் உண்டாகும் துண்டம் அக் கடவினும் பெரிது. 36.2

என் காதலர் வராதபோது எதிர்பார்த்து ஏக்கத் தால் என் கண்கள் இமைமூடி உறங்குவதில்லை. காதலர் வந்து அமைந்தால் அவரைக் கண்டுகொண்டே இருப்பதால் இமை மூடி உறங்குவதில்லை. இவ்வாறு இரு நிலைகளுக்கிடையே என் கண்கள் பெருந்துன் பத்தை அடைந்துள்ளன. 36.j

என் காதலர் என்னைப் பிரிந்து காம நோயையும்’ அதஞல் பசப்பு என்னும் தேடலையும் கொடையாகக் கொடுத்தார். இக்கொடைக்குக் கைம்மாருக என் உடல் மெருகையும் நாணத்தையும் எடுத்துக்கொண் டார். கொடை கைமாறு பெறுவதில்லை. இது தகவான கொடையோ? 364

அவரைத் தழுவியவாறே என்னே மறந்து கிடந் தேன், என்னேயும் அறியாமல் சிறிது பக்கத்தில் பெயர்ந்தேன். அந்தப் பிரிவிற்குள் பசுப்பு என்னும் தேமல் என் உடலை அள்ளிக் கொள்வதுபோல் எங்கும் பரவிவிட்டது. 65

350

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/162&oldid=555659" இலிருந்து மீள்விக்கப்பட்டது