பக்கம்:குறள் நானூறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பொருளை அறிந்த நல்லவரது வாயிலி ருந்து வரும் சொல் அன்பு கலந்தது; வஞ்சம் அற்றது. அதுவே இனிய சொல். - 41

முகம் மலர்ந்து இனிய சொல்லைச் சொல்பவளுக வேண்டும். சொல்பவன், உள்ளம் விரும்பி ஈத்லே விடச் சிறந்ததைச் செய்தவன் ஆவான். 42

எவரிடத்தும் இன்பத்தை மிகுதிப்படுத்தும் இனிய சொல்லைச் சொல்பவனுக்குத் துன்பத்தை மிகுதிப் படுத்தும் வறுமை இல்லாமற் போகும். 43

இனிய சொல் கேட்பவர்க்கும் பயன்தந்து, பண் பிலிருந்து நீங்காத சொல்லாகும். அது சொல்பவ னுக்கும் ம கி ழ் ைவத் தந்து நன்மையை உண் டாக்கும். 44

சுவையான பழம் கையில் இருக்கவும் சுவை யில்லாத காயைத் திருடி உண்பது நகைக்கத் தக்கது. அதுபோன்று இயல்பாக இனிய சொல் இருக்கக் கடுஞ்சொல்லை வரவழைத்துக் கூறுவது நகைக்கத் தக்கது. - 每莎

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/30&oldid=555527" இலிருந்து மீள்விக்கப்பட்டது