பக்கம்:குறள் நானூறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றும் அற்ற ஏழையர்க்கு அவர் விரும்பும் பொருளை மன மகிழ்வோடு கொடுப்பதே ஈகை, பிற கொடை எல்லாம் அளந்து கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் பண்டமாற்றுத் தன்ன்மயை உடையதாகும். - 9 l

எவ்வகை நல்ல வழியில் வருவதாயினும் பிறர் ஈவதை இல்லறத்தார் பெற்றுக்கொள்வது நல்ல தன்று. ஆனால், இல்லாதவர்க்கு ஈவதால் மேம்பட்ட நிலையைத் தரும் ஓர் உலகம் கிடைக்காமற் போவ தானலும் ஈதலே சிறந்தது. . 9 3

வறுமையால் ஒன்றும் அற்ற ஏழையரது அழிக்கும் பசியை ஈகையால் தீர்த்து வைத்தல் வேண்டும். அது செல்வம் பெற்ற ஒருவன் தன் செல்வத்தைச் சேமித்து வைக்கும் சேமிப்பு இடமாகும். 9 3

பொருளைச் சேர்த்துவைத்து இறுதியில் இழந்து விடும் அன்பற்றவர் உளர். அவர் ஏழையர்க்கு ஈந்து அதனுல் உவப்படையும் இன்பத்தை அறியாதவர் போலும், 94

சாதலைவிடத் துன்பமானது வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏழையர் விரும்பும் பொருள்ை சய முடியாத துன்ப நிலையில் கொடிய சாவும் இனியதாம். 95

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/50&oldid=555547" இலிருந்து மீள்விக்கப்பட்டது